சமீபகாலமாகவே தமிழில் கதாநாயகிகளை மையப்படுத்தி பல திரைப்படங்கள் வரத் தொடங்கியுள்ளன. அந்த வரிசையில் கதாநாயகிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உருவாகி வரும் ஐ.பி.சி 376 திரைப்படத்தில் நந்திதா ஸ்வேதா கதாநாகியாக நடித்துள்ளார். இது ஆக்ஷன் ஹாரர் கலந்த கமெர்ஷியல் படம்.
2008 ஆம் ஆண்டு ‘நந்தா லவ்ஸ் நந்திதா’என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நந்திதா ஸ்வேதா. அட்டக்கத்தி திரைப்படம் தமிழ் திரையுலகினருக்கும் அவரைத் தெரிய வைத்தது.
தற்போது தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் உருவாகும் ஐ.பி.சி 376 என்ற படத்தில் காவல்துறை அதிகாரியாக நந்திதா ஸ்வேதா நடித்து வருகிறார். ஆக்ஷன் காட்சிகள் அதிகம் உள்ள இந்தப் படத்தில் வரும் சண்டைக்காட்சிகளில் பெரும்பாலும் டூப் இல்லாமல் துணிச்சலாக நடித்துள்ளார் நந்திதா. படப்பிடிப்பின் இடையே அவருக்கு அடிபட்டபோதும், எதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து நந்திதா நடித்திருக்கிறார்.
நடிகை விஜயசாந்திக்குப் பிறகு சண்டைக்காட்சிகளில் அசாத்தியமாக நடித்திருக்கும் நடிகை நந்திதா ஸ்வேதா தான் என்ற பேச்சு ஏற்கனவே இண்டஸ்ட்ரி எங்கும் கேட்கிறது. ஹாரர், சேஸிங், சஸ்பென்ஸ், ஆக்ஷன் என கதை திரைக்கதை எழுதி படத்தை இயக்கி வருகிறார் ராம்குமார் சுப்பாராமன்.
இப்படம் பெண்களைப் போற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பில் உள்ள IPC 376 என்பது பெண்கள் மீதான பாலியல் கொடுமைக்கு எதிரான சட்டத்தைக் குறிக்கிறது.
இப்படி இப்படத்தின் தலைப்பிலே பெண்கள் மீதான அக்கறை தெரிவதால்,படம் மீதான எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியிருக்கிறது. IPC 376 படத்தில் அண்ணாதுரை, தகாராறு படங்களில் பணியாற்றிய தில்ராஜ் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். கோலமாவு கோகிலா படத்தின் எடிட்டர் நிர்மல் எடிட்டிங் பணியை கவனிக்கிறார்.
�,”