�
தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பனங்கருப்பட்டி, அச்சு வெல்லம், நாட்டுச் சர்க்கரையில் ரசாயனம் கலக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உணவுப்பாதுகாப்புத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
பொங்கல் பண்டிகையையொட்டி அதிகளவில் நாட்டுச் சர்க்கரை, பனங்கருப்பட்டி,அச்சுவெல்லம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த பொருட்கள் தயாரிக்கப்படக் கூடிய தொழிற்சாலைகளில் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய ரசாயன பொருட்கள் கலப்படம் செய்வதாக புகார் வந்தது.
இதையடுத்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் செந்தில்குமார் எழுதிய கடிதத்தில்,” நாட்டுச் சர்க்கரை,பனங்கருப்பட்டி, அச்சு வெல்லம் ஆகியவற்றில் ரசாயனம் கலக்கப்படுகிறதா? என்பதை குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். கலப்படம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட தொழிற்சாலை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தொழிற்சாலைகளில் நாட்டுச் சர்க்கரை, பனங்கருப்பட்டி, அச்சுவெல்லம் போன்றவற்றில் கலப்படம் செய்வதை தடுக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-வினிதா**
�,