uசிதம்பரம் ஜாமீன் மனு: மீண்டும் நிராகரிப்பு!

Published On:

| By Balaji

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறி முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தனித் தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இவ்வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி சிபிஐயால் சிதம்பரம் கைது செய்யப்பட்டார். சிபிஐ விசாரணை முடிந்த நிலையில் திகார் சிறையில் அடைக்கப்பட்ட சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

முன்னதாக, கடந்த அக்டோபர் 16ஆம் தேதி திகார் சிறையில் வைத்து அவரை அமலாக்கத் துறை கைது செய்தது. இதனால் சிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைத்தபோதிலும் சிதம்பரம் சிறையில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு 86 நாட்களாக சிறையில் உள்ள நிலையில், அமலாக்கத்துறை வழக்கில், ஜாமீன் கோரி சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ் கெய்த், சிதம்பரம் ஜாமீன் தொடர்பாக இன்று(நவம்பர் 15) தீர்ப்பு அளித்தார்.

நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளதாவது, “இந்த வழக்கில் சிதம்பரத்தின் பங்கு முக்கியமானது என்பதால் ஜாமீன் வழங்க முடியாது. அவ்வாறு ஜாமீன் வழங்குவது சமூகத்திற்கு தவறான முன்னுதாரணத்தை அளித்து விடும். சட்டவிரோத பணபரிமாற்ற புகாரில் சிதம்பரத்துக்கு எதிரான வலிமையான ஆதாரங்கள் உள்ளன. இந்த முறைகேடில் அவர் முக்கிய பங்காற்றியதற்கான ஆதாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. எனவே சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க முடியாது” எனக் கூறினார்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share