வெள்ளரிக்காயில் 95% தண்ணீரும், மீதமுள்ள 5% அளவில் பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவையும் அடங்கியுள்ளன. நீர்ச்சத்து நிறைந்த இந்த வெள்ளரிக்காய்க்கு மருத்துவக் குணங்கள் ஏராளம். நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் வெள்ளரியில் சுவைமிகு இன்ஸ்டன்ட் தோசையும் செய்து சுவைக்கலாம்.
**என்ன தேவை?**
வெள்ளரிக்காய் – ஒன்று (துருவவும்)
தோல் சீவிய இஞ்சி – ஒரு இஞ்ச் அளவு (துருவவும்)
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 3 முதல் 5 வரை
வறுத்த ரவை – 2 கப்
கோதுமை மாவு – கால் கப்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
தாளிக்க
சீரகம் – ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
பெருங்காயம் – கால் டீஸ்பூன்
**எப்படிச் செய்வது?
வெள்ளரித் துருவலுடன் இஞ்சி, பச்சை மிளகாய், ரவை, கோதுமை மாவு, உப்பு சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர்விட்டு சற்று நீர்க்கக் கரைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்து மாவுடன் கலக்கவும். தோசைக்கல்லைக் காயவிட்டு மாவை மெல்லிய தோசைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும். சட்னி, சாம்பாருடன் பரிமாறலாம்.
**[நேற்றைய ஸ்பெஷல்: வெள்ளரி ஊறுகாய்](https://minnambalam.com/public/2022/04/11/1/vellari-pickle)**
.