Lரயில் மோதிய யானை உயிரிழப்பு!

Published On:

| By Balaji

திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி காயமடைந்த யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

கோவை மாவட்டம், மதுக்கரை வனச்சரகம், சின்னாம்பதி அருகே வாழையாறு ஆற்றில் தண்ணீர் குடித்துவிட்டு தண்டவாளத்தை கடக்கும்போது ஆண் யானை மீது கடந்த 15 ஆம் தேதி திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது.

அப்பகுதியில் ரயில் இருப்புப்பாதை மிகவும் வளைவாக அமைந்திருக்கும். கேரளாவில் இருந்து சென்னை நோக்கி வந்த திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில் அந்த வளைவான பகுதியில் வரும் போது யானையும் தண்டவாளத்தில் ஏறியுள்ளது. அப்போது யானையின் மீது ரயில் மோதியது. ஒரு 100 மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்ட பின் யானை தண்டவாளத்தில் இருந்து 5-10 மீட்டர் தூரம் கீழே இறங்கி படுத்து விட்டது என வனத்துறையினர் கூறினர்.

இதில், யானையின் தலை இடுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திலேயே கால்நடை மருத்துவக் குழு யானைக்கு சிகிச்சை அளித்தனர். மேல் சிகிச்சைக்காக சாடிவயல் யானைகள் முகாமிற்கு காயம்பட்ட யானை அழைத்து செல்லப்பட்டது. இரண்டு நாட்கள் யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. யானையின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வந்த நிலையில், நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

இதுகுறித்துமாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் கூறுகையில்,”யானை உயிரை காப்பாற்றுவதற்கு பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டும், யானை உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வனப்பகுதி வழியாக செல்லக்கூடிய ரயில்களை மெதுவாக இயக்கக் கோரி ரயில்வே துறைக்கு மீண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது” என கூறினார்.

**வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share