இந்தியா-பிரிட்டன் இடையே மீண்டும் விமானச் சேவை!

public

வரும் ஜனவரி 8ஆம் தேதி முதல் இந்தியா பிரிட்டன் இடையே மீண்டும் விமானச் சேவை தொடங்கப்படவுள்ளதாக விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்குப் பரவி ஓராண்டு கடந்துள்ள நிலையில், மரபணு மாற்றம் பெற்று புதிய வடிவில் பரவத் தொடங்கியது. முதலில் பிரிட்டனில் இந்த தொற்று கண்டறியப்பட்டது. இதனால் பிரிட்டன் விமானங்களுக்கு இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் தடை விதித்தன.

இந்தியா முதலில் டிசம்பர் 31ஆம் தேதி வரை தடை விதித்து பின்னர் இந்த தடையை ஜனவரி 7ஆம் தேதி வரை நீட்டித்தது. இதனிடையே பிரிட்டனிலிருந்து நாடு திரும்பிய 33,000 பேருக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 100க்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதில் 29 பேருக்கு புதிய தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த சூழலில் வரும் ஜனவரி 8ஆம் தேதி முதல் மீண்டும் பிரிட்டனுக்கு இந்தியாவிலிருந்து விமானங்களை இயக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியா-பிரிட்டன் இடையே ஜனவரி 8ஆம் தேதி முதல் விமானச் சேவை மீண்டும் தொடங்கப்படவுள்ளது. எனினும், ஜனவரி 23ஆம் தேதி வரை சில கட்டுப்பாடுகளுடன் வாரத்திற்கு 15 விமானங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.

மேலும், இந்த விமானங்கள் அனைத்தும், டெல்லி, மும்பை, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு விமான நிலையங்களிலிருந்து மட்டுமே இயக்கப்படும்” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக பிரிட்டன் மட்டுமின்றி அனைத்து நாடுகளிலிருந்து வரும் விமான பயணிகளுக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறதா எனச் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

**-பிரியா**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *