முடிவுக்கு வரும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்!

Published On:

| By admin

27 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களுக்கு சேவை செய்த மைக்ரோசாப்டின் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் இறுதியாக ஓய்வு பெறுகிறது. விண்டோஸ் 95க்கான ஆட்-ஆன் தொகுப்பாக 1995ஆம் ஆண்டில் முதன்முதலில் தொடங்கப்பட்ட இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. கடந்த 2003ஆம் ஆண்டில் மைக்ரோசாப்ட் பயனாளிகளில் 95 சதவீத பேர் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்படுத்தினர். அதன் பின்னர் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயனர் எண்ணிக்கை வெகுவாகக் குறையத் தொடங்கியது. மேலும் சிறந்த இணைய வேகம் மற்றும் மென்மையான செயல்திறன் ஆகியவற்றுடன் பல புதிய போட்டியாளர்கள் களத்தில் இறங்கினர். இதனால் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பயனர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது.

இன்டர்நெட் எக்ஸ்பிளோரர் அறிமுகமானதிலிருந்து வங்கிகள் மற்றும் ஐடி நிறுவனங்களின் பிரவுசிங் முதன்மை தேர்வாக இன்டர்நெட் எக்ஸ்பிளோரர் இருந்தது. பின்னர் சில ஆண்டுகளுக்குப் பிறகு கூகுள் குரோம், மொசில்லா பயர்பாக்ஸ் போன்ற பிரவுசிங் தளங்களை மக்கள் அதிகம் பயன்படுத்த தொடங்கினர். இந்நிலையில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பிரவுசிங்கை நிறுத்துவதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. வருகிற ஜூன் 15, 2022 முதல் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் செயல்பாடுகள் நிறுத்தப்படும்.

இதுகுறித்து மைக்ரோசாஃப்ட் எட்ஜ் மேலாளர் சீன் லிண்டர்சே கூறுகையில், “இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் எதிர்காலம் விண்டோஸ் 10 இல் மைக்ரோசாஃப்ட் எட்ஜில் உள்ளது. மைக்ரோசாஃப்ட் எட்ஜ் என்பது இன்டர்நெட் எக்ஸ்புளோரரை விட விரைவான, பாதுகாப்பான மற்றும் அதிக சமகால பிரவுசிங் அனுபவமாக இருக்கும் ஆனால் பழைய இணையதளங்கள் மற்றும் பயன்பாடுகளுக்கான இணக்கத்தன்மை சில கடினத்தை தருகிறது” என்று தெரிவித்தார்.

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share