கடந்த ஆண்டு இறுதியில் சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது. மற்ற நாடுகளில் கொரோனா வேகமாகப் பரவிய காலத்தில் இந்தியாவில் இதன் வேகம் சற்று குறைவாக இருந்தது. அப்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அனைத்து செயல்பாடுகளையும் மத்திய மாநில அரசுகள் நிறுத்தி வைத்தன. இதனால் இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கை சிறப்பாக இருப்பதாக உலக நாடுகள் பாராட்டின.
ஆனால் தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு வரும் அதே வேளையில், கொரோனாவின் தாக்கமும் அதிகரித்து வருகிறது. உலக அளவில் 77,39,831 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 21,16,922 பேர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் ஆவர். அமெரிக்காவைத் தொடர்ந்து பிரேசிலில் 8,29,902 பேரும், ரஷ்யாவில் 5,11,423 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து நான்காவது இடத்தில் இந்தியா இருக்கிறது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவலில் இந்தியாவில் பாதிப்பு 3 லட்சத்தைக் கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீப நாட்களாகப் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 11,458 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 389 பேர் ஒரே நாளில் உயிரிழந்த நிலையில், நாடு முழுவதும் இதுவரை கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 11,458 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனையில் 1,45,779 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 1.5 லட்சம் பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
**மாநில வாரியான பட்டியல்**
மகாராஷ்டிரா – 1,01,141
தமிழ்நாடு – 40,698
டெல்லி – 36,824
குஜராத் – 22,527
உத்தரப் பிரதேசம் – 12,616
ராஜஸ்தான் – 12,068
மத்தியப் பிரதேசம் – 10,443
மேற்கு வங்கம் – 10,244
கர்நாடகா – 6,516
ஹரியானா – 6,334
பிகார் – 6,103
ஆந்திரா – 5,680
ஜம்மு-காஷ்மீர் – 4,730
தெலங்கானா – 4,484
அசாம் – 3,498
ஒடிசா – 3,498
பஞ்சாப் – 2,986
கேரளா – 2,322
உத்தரகண்ட் – 1,724
ஜார்க்கண்ட் – 1,617
சத்தீஸ்கர் – 1,429
திரிபுரா – 961
இமாச்சலப் பிரதேசம் – 486
கோவா – 463
மணிப்பூர் – 385
சண்டிகர் – 334
லடாக் – 239
புதுச்சேரி – 157
நாகாலாந்து – 156
மிசோரம் – 104
அருணாசல பிரதேசம் – 67
சிக்கிம் – 63
மேகாலயா – 44
அந்தமான் & நிகோபார் தீவுகள் – 38
ஹவேலி மற்றும் டாமன் & டயு – 30
**-கவிபிரியா**�,