தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தும் மாவட்டங்களில் கோயம்புத்தூர் முன்னிலை வகிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசால் 2015ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்படி, நாடு முழுவதும் முக்கிய நகரங்களைத் தேர்ந்தெடுத்து அந்த நகரங்களில் ஸ்மார்ட் சாலைகள், நீர்நிலைகளை மேம்படுத்துதல், நடைபாதைகள் அமைத்தல், ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்குதல் போன்ற திட்டங்களை நிறைவேற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ரூ.9,860 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை அமல்படுத்துவதிலும், அதை விரைவில் நிறைவேற்றி முடிப்பதிலும் கோயம்புத்தூர் முன்னிலை வகிப்பதாக மத்திய நகர்ப்புற மற்றும் வீடமைப்பு அமைச்சகம் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோயம்புத்தூரில் இதுவரையில் 14 திட்டங்கள் நிறைவேற்றி முடிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கான செலவு ரூ.86.78 கோடியாகும். அதோடு, ரூ.1,210 கோடி மதிப்பிலான 52 திட்டங்கள் நிறைவுறும் தறுவாயில் இருக்கின்றன. 2020ஆம் ஆண்டுக்குள் இத்திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றி முடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான ஒப்புதலைப் பெறுவதிலும் கோயம்புத்தூர் முன்னிலை வகிக்கிறது. நிறைவுறும் தறுவாயில் உள்ள திட்டங்களின் எண்ணிக்கையில் தேசிய அளவில் கோயம்புத்தூர் முதல் ஐந்து இடங்களுக்குள் இருக்கிறது.
கோயம்புத்தூரைத் தொடர்ந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தும் மாவட்டமாக சேலம் உள்ளது. சேலத்தைத் தொடர்ந்து சென்னை மூன்றாம் இடத்தில் இருக்கிறது. கோயம்புத்தூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உக்கடத்தில் சோலார் மின்னுற்பத்தி ஆலை அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் மூலமாகச் சுகாதாரமான ஆற்றல் வளம் கிடைப்பதோடு, மின் கட்டணத்தில் ஆண்டுக்கு ரூ.5 கோடி வரையில் மிச்சமாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
**
மேலும் படிக்க
**
**[பிக் பாஸ் 3: ஜஸ்ட் லைக் தட் சிறுசுகள்!](https://minnambalam.com/k/2019/07/19/9)**
**[டிஜிட்டல் திண்ணை: ரஜினி Vs ஸ்டாலின் -ஜோதிடர் மூட்டிய கலகம்!](https://minnambalam.com/k/2019/07/18/82)**
**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! – 2](https://minnambalam.com/k/2019/07/13/54)**
�,”