Iவிண்ணை முட்டும் டீசல் விலை!

public

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று வரலாறு காணாத அளவில் டீசல் விலை ரூ.69.46 ஆக அதிகரித்துள்ளது.

தேசியத் தலைநகர் டெல்லியில் இன்று (ஆகஸ்ட் 27) பெட்ரோல் விலை 14 பைசாவும், டீசல் விலை 13 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளதாக பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 78 ரூபாய்க்கும், டீசல் 69.46 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மும்பையில் டீசல் விலை ரூ.73.74 ஆக இருக்கிறது. கடைசியாக மே 29ஆம் தேதி டெல்லியில் பெட்ரோல் விலை மிக அதிகமாக ரூ.69.31 ஆக இருந்தது. அதன் பின்னர் இன்று வரலாறு காணாத விலையேற்றத்தைச் சந்தித்துள்ளது.

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையேற்றம் காரணமாக பெட்ரோலியப் பொருட்களின் விலை அதிகரித்து வந்த நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரியத் தொடங்கியதால் அதன் பாதிப்பு இன்னும் அதிகமானது. ஆகஸ்ட் 16ஆம் தேதி இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.70.32 ஆகக் குறைந்ததிலிருந்தே பெட்ரோலியப் பொருட்களின் விலை தினமும் உயர்த்தப்பட்டு வருகிறது. பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்ந்து வருவதால் அதைக் கட்டுப்படுத்த அவற்றின் மீதான கலால் வரியைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பினரிடையே அதிகரித்துள்ளது. அதேபோல, இவற்றைச் சரக்கு மற்றும் சேவை வரி வளையத்துக்குள் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது. அவ்வாறு செய்தால் மாநில அரசுகளின் வருவாய் ஆதாரம் பாதிக்கப்படும் என்பதால் இந்த முடிவை அரசு இன்னும் மேற்கொள்ளாமல் உள்ளது.

இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 80.94 ரூபாய்க்கும், டீசல் 73.38 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0