iரூ.127 கோடி கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு!

Published On:

| By Balaji

தமிழகம் முழுவதும் கடந்த ஒரு நிதியாண்டில் ரூ.127 கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இருக்கும் கோவில்களுக்குப் பாத்தியப்பட்ட நிலங்களை ஆக்கிரமிப்பாளர்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துப் பயன்படுத்தி வருகின்றனர். நாளடைவில் அந்த இடங்களில் வீடு உள்ளிட்ட கட்டிடங்களை அமைத்து தங்களுக்குச் சொந்தமான இடமாக மாற்றிக்கொள்கின்றனர். இவ்வாறாக முறைகேடான வகையில் ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலங்களையும் கட்டடங்களையும் இந்து சமய அறநிலையத் துறை கைப்பற்றி வருகிறது. 2018-19 நிதியாண்டில் 276.31 ஏக்கர் விவசாய நிலங்களும் கட்டடங்களும் அறநிலையத் துறையால் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட இச்சொத்துகளின் மதிப்பு ரூ.127.42 கோடியாகும். இவை தமிழகம் முழுவதும் 146 கோவில்களுக்குச் சொந்தமான நிலங்களாகும். ஜூலை 15ஆம் தேதி சட்டசபையில் இதுதொடர்பான விவாதங்கள் இடம்பெற்றன. இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் *டைம்ஸ் ஆஃப் இந்தியா* ஊடகத்திடம் பேசுகையில், “கோவிலுக்குச் சொந்தமான நிலங்களைத் தனிநபர்கள் தங்களது பெயர்களில் மாற்றிக்கொள்கின்றனர். கடந்த எட்டு ஆண்டுகளில் மட்டும் இவ்வாறாக 6,582 ஏக்கர் அளவிலான கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. 1,005 கோவில்களுக்குச் சொந்தமான இந்நிலங்கள் மீண்டும் கோவில்களுக்கே திருப்பி வழங்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

**

மேலும் படிக்க

**

**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**

**[ “மாற்று வேட்பாளரை மாற்றுங்கள்”- துரைமுருகனிடம் ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/07/16/53)**

**[தயாராகிறது பாகுபலி 3?](https://minnambalam.com/k/2019/07/16/26)**

**[என் மகனாகப் பார்க்காதீர்கள்… ‘திமுக’காரனாகப் பாருங்கள்!](https://minnambalam.com/k/2019/07/16/27)**

**[அதிமுக தலைவராகிறாரா ரஜினி?](https://minnambalam.com/k/2019/07/15/18)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share