6
யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் தர்மபிரபு படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பு பெற்றுவருகிறது.
முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகி பாபு தற்போது கதாநாயகனாகவும் சில படங்களில் ஒப்பந்தமாகி நடித்துவருகிறார்.
வடிவேலு நடிப்பில் வெளியான இம்சை அரசன் 23ம் புலிகேசி திரைப்படம் புனைவு வரலாற்று கதையாக உருவாகியிருந்தாலும் சமகால அரசியல் போக்குகளை பகடி செய்யும் விதமான காட்சிகள் இடம்பெற்றிருக்கும். தர்மபிரபு படத்தில் பாவம் செய்தவர்களை சொர்க்கத்துக்கும் புண்ணியம் செய்தவர்களை நரகத்துக்கும் அனுப்பும் எமதர்ம ராஜாவாக யோகி பாபு நடித்துள்ளார். எமலோகத்தில் நடைபெறும் சம்பவங்கள் மத்திய, மாநில அரசுகள், கட்சிகளை விமர்சிக்கும் வகையில் உருவாகியுள்ளது.
“அக்கவுண்டில் பணம் போடுகிறேன் என்று சொல்லிவிட்டு ஆடைகளாக போட்டுக்கொண்டுள்ளாரா.. அவர் நம் அக்கவுண்டில் இருக்கிறாரா”
“அம்மா போனால் சின்னம்மா, அய்யா போனால் சின்னய்யா” என டீசரில் இடம்பெற்றுள்ள வசனங்கள் தேர்தல் நேரத்தில் கவனத்தை ஈர்க்கின்றன. எமலோகத்தில் மட்டுமல்லாமல் பூலோக காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
இந்தப் படத்தை முத்துகுமார் இயக்கியுள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஷான் லோகேஷ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ஸ்ரீ வாரி பிலிம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளன.
[தர்மபிரபு டீசர்](https://www.youtube.com/watch?time_continue=68&v=4imRwlwNpvE)
�,