h
பிரதமர் மோடியின் யோகா உடற்பயிற்சி வீடியோவுக்கு எந்த செலவும் செய்யப்படவில்லை என்று பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.
மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்வர்தன் சிங் ராத்தோர் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் வீராட் கோலி, ரித்திக் ரோஷன் மற்றும் சாய்னா நேவால் ஆகியோரை டேக் செய்து அவர்களுக்கு ‘பிட்னஸ் சவால்’ விடுத்தார்.
ராத்தோரின் சவாலை ஏற்றுக்கொண்ட விராட் கோலி, தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டு, பிரதமர் மோடி, கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, நடிகை அனுஷ்கா சர்மா ஆகியோருக்கு சவால் விடுத்தார்.
கோலியின் பிட்னஸ் சவாலை ஏற்று பிரதமர் மோடி ஜூன் 13ஆம் தேதி உடற்பயிற்சி மற்றும் யோகா செய்வது போன்ற வீடியோவை வெளியிட்டார்.
இந்நிலையில், காங்கிரஸ் எம்பி சசிதரூர் பிரதமரின் யோகா வீடியோ தயாரிக்க ரூ.35 லட்சம் செலவிடப்பட்டதாக குற்றம்சாட்டினார்.
பிரதமர் மோடியின் வீடியோ செலவு குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பிரதமர் அலுவலகம் அளித்துள்ள விளக்கத்தில் “ஜூன் 13இல் வெளியிடப்பட்ட பிரதமர் மோடியின் உடற்பயிற்சி வீடியோவுக்கு எந்த செலவும் ஆகவில்லை. பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில்தான் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டது. பிரதமர் அலுவலக ஒளிப்பதிவாளர் இதை வீடியோவாக பதிவு செய்தார். எனவே இந்த வீடியோ தயாரிக்க எந்த செலவும் ஆகவில்லை” என கூறப்பட்டுள்ளது.�,