Iமெலடி ஷாக் கொடுத்த டிஎஸ்பி!

Published On:

| By Balaji

சாமி ஸ்கொயர் படத்தின் ‘அதிரூபனே’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ நேற்று (ஜூலை 10) வெளியாகியுள்ளது.

விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள சாமி ஸ்கொயர் படத்தின் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. டீசர், ட்ரெய்லர் ஏற்கெனவே வெளியான நிலையில் ‘அதிரூபனே’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.

சாமி படத்தின் முதல் பாகத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. இரண்டாம் பாகத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். ஹரி படங்களில் அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகள் அதிகளவில் இடம்பெற்றிருக்கும். தேவி ஸ்ரீ பிரசாத்தும் அவரோடு இணைந்ததால் ஆட்டம் போட வைக்கும் பாடல்களே அதிகம் இருக்கும் என எதிர்பார்ப்பு நிலவியது. ஏனெனில் இந்தக் கூட்டணி இணைந்து பணியாற்றிய மற்ற படங்களில் காதலை வெளிப்படுத்தும் பாடல்கள்கூட அந்த தொனியிலேயே உருவாகியுள்ளன. ஆனால், அதை மாற்றிக்காட்டும் விதமாக தற்போது வெளியாகியுள்ள ‘அதிரூபனே’ பாடல் மெலடியில் உருவாகியுள்ளது.

*“அதிரூபனே அதிகாரனே*

*சூறைக் காற்றென வந்தாய்*

*என் சுதந்திரம் மீண்டும் தந்தாய்*

*மாமழையாகி நின்றாய்*

*மதயானை போலே வென்றாய்”*

என்று விவேகா பாடல்கள் எழுத மானசி குரல் கொடுத்துள்ளார். கீர்த்தி சுரேஷ், காதலுடன் விக்ரமை நினைத்துப் பாடுவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது. வீடியோவில் இடம்பெற்ற புகைப்படங்கள், பாடல் வரிகள் அதை உணர்த்துகின்றன. பட உருவாக்கத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

[‘அதிரூபனே’](https://www.youtube.com/watch?v=6-Gh_TTImm4)�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share