Iமின் மிகை நாடாகும் இந்தியா!

Published On:

| By Balaji

இந்த நிதியாண்டிலேயே இந்தியா மின் மிகை நாடாக உருவெடுக்கும் என்று மின்சக்தி ஆணையம் தெரிவித்துள்ளது

இதுகுறித்து மின்சக்தி ஆணைய அதிகாரி ஒருவர் ஆகஸ்ட் 5ஆம் தேதி பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், “இந்த ஆண்டில், அகில இந்திய அளவிலான மின் நிலைகளைப் பார்த்தால், உபரி மின்சாரம் 0.6 விழுக்காடாகவும், மின் பயன்பாடு உச்சபட்சமாக இருக்கும் நேரத்தில் உபரி மின்சாரம் 2.5 விழுக்காடாகவும் இருக்குமென்று 2018-19 நிதியாண்டுக்கான தலைமைப் பொருளாதார அறிக்கையில் கூறப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

இந்த அறிக்கையின்படி, ’மேற்கு மாநிலங்களில் உபரி மின்சாரம் 1.9 விழுக்காடாகவும், வடக்கு மாநிலங்களில் 14.8 விழுக்காடாகவும், வட கிழக்கு மாநிலங்களில் 22.9 விழுக்காடாகவும் இருக்கும். அதே நேரத்தில் கிழக்கு மற்றும் தென் மாநிலங்களில் மின் பற்றாக்குறைதான் நிலவும். கிழக்கு மாநிலங்களில் மின் பற்றாக்குறை 4.2 விழுக்காடாகவும், தென் மாநிலங்களில் 0.7 விழுக்காடாகவும் இருக்கும்’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்த ஆய்வறிக்கையில், 2017-18ஆம் நிதியாண்டில் மின் மிகை நாடாக இந்தியா உருவெடுக்கும் என்று கூறப்பட்டிருந்தது. இருப்பினும் அதற்கு நேர்மாறாக மின் பயன்பாடு உச்ச நேரத்தில் மின் பற்றாக்குறை 2.1 விழுக்காடாகவும், ஒட்டுமொத்த மின் பற்றாக்குறை 0.7 விழுக்காடாகவும் இருந்தது. இந்த ஆண்டிலும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் மின் பயன்பாடு உச்ச நேரத்தில் பற்றாக்குறை 0.7 விழுக்காடாகவும், ஒட்டுமொத்த மின் பற்றாக்குறை 0.6 விழுக்காடாகவும் இருந்தது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share