Iமாநில அரசுகள் உதவ வேண்டும்!

Published On:

| By Balaji

ராணுவம், தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட திட்டங்களில் நிதியுதவி செய்ய மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று பொருளாதார ஆலோசனை கவுன்சில் தெரிவித்துள்ளது.

தொழில் துறைக் கூட்டமைப்பான அசோசேம் சார்பாக மே 17ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை கவுன்சில் அமைப்பின் தலைவரான பிபெக் டெப்ராய் பேசுகையில், “மாநில அரசுகளின் சுகாதாரத் திட்டங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்கி வருகிறது. ரயில்வே, தேசிய நெடுஞ்சாலை மற்றும் ராணுவம் உள்ளிட்ட திட்டங்களுக்கு மாநில அரசுகள் ஏன் உதவக்கூடாது?” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், “இந்தியா போன்றதொரு மிகப் பெரிய நாட்டில் நிலம், ஊழியர்கள் மற்றும் மூலதனம் ஆகியவற்றின் பயன்பாடு வளர்ச்சிக்கு மிக முக்கியமானதாகும். எனவே இவற்றை சிறப்பான முறையில் பயன்படுத்த வேண்டும். நம் நாட்டில் ஒரு சில மாநிலங்களில் கள ஆய்வுகள் சரியான முறையில் மேற்கொள்ளப்படுவதில்லை. அவற்றை சிறப்பாக மேற்கொண்டால்தான் அங்குள்ள நிலங்களைச் சரியான முறையில் பயன்படுத்த முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

.

.

**

மேலும் படிக்க

**

.

**

[விமர்சனம்: மிஸ்டர் லோக்கல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/7)

**

.

**

[டிஜிட்டல் திண்ணை: கெஞ்சல், மிரட்டல்- கமல் வெளியிடாத ரகசியத் தகவல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/84)

**

.

**

[ஸ்பெயின் ரசிகர்களைக் கவர்ந்த தனுஷ்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/53)

**

.

**

[தினகரனுக்கு எடப்பாடி சொன்ன செய்தி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/27)

**

.

**

[இன அழிப்புப் போரில் இறந்தோருக்கு அஞ்சலி](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/24)

**

.

.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share