மாதவன் முதன்முறையாக இயக்கும் ராக்கெட்ரி: நம்பி விளைவு படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. தற்போது அவர் மீண்டும் நடிப்பு பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார்.
அனுஷ்காவுடன் அவர் இணைந்து நடிக்கும் சைலன்ஸ் திரைப்படம் அமெரிக்காவில் படமாக்கப்பட்டுவருகிறது. ஹேமந்த் மதுகர் இயக்குகிறார். அனுஷ்கா திரைத்துறையில் 14ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளதை முன்னிட்டு இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை நாளை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
டி-சீரிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் குல்ஷன் குமாரின் மகள் குஷாலி குமார் கதாநாயகியாக அறிமுகமாகும் இந்திப் படம் ஒன்றிலும் மாதவன் இணைந்துள்ளார். மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அஸ்வின் இந்தப் படத்தை இயக்குகிறார்.
ராக்கெட்ரி: நம்பி விளைவு படம் மும்மொழிகளிலும் தயாரானாலும் விக்ரம் வேதா படத்திற்குப் பின் மாதவன் தமிழை மட்டும் குறிவைத்து எந்தப் படத்திலும் ஒப்பந்தமாகாமல் இருந்தார். தொடர்ந்து பாலிவுட், டோலிவுட் வாய்ப்புகள் வந்தவண்ணம் இருந்த நிலையில் தற்போது புதிய தமிழ்ப் படத்தில் இணைந்துள்ளார்.
துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்த மலையாளத் திரைப்படம் ‘சார்லி’யின் ரீமேக்காக இப்படம் உருவாகிறது. அதில் பார்வதி கதாநாயகியாக நடித்திருந்தார். பயணத்தை அடிப்படையாகக் கொண்ட அப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்தப் படத்தின் அதிகாரபூர்வ தமிழ் ரீமேக்கில் துல்கர் நடித்த வேடத்தில் மாதவன் நடிக்கிறார். அறிமுக இயக்குநர் திலீபன் இயக்குகிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.
கதாநாயகனுக்கு சமமாக கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள படம் சார்லி. கதாநாயகனைத் தேடிய கதாநாயகியின் பயணமாகவே திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். அந்தவகையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அந்த கதாபாத்திரத்தில் யார் நடிக்கவுள்ளார் என்பது இன்னும் உறுதியாகவில்லை. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்.
**
மேலும் படிக்க
**
**[ தமிழ் பேசினால் தமிழ்ப் படமா?](https://minnambalam.com/k/2019/07/20/20)**
**[டிஜிட்டல் திண்ணை: சசிகலா நடத்திய மெகா குடும்ப பஞ்சாயத்து!](https://minnambalam.com/k/2019/07/19/85)**
**[ஆகஸ்டில் இங்கிலாந்து பறக்கும் தனுஷ்](https://minnambalam.com/k/2019/07/20/17)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! – 2](https://minnambalam.com/k/2019/07/13/54)**
�,”