மனிஷா கொய்ராலா தனது நடிப்பில் வெளியான புகழ்பெற்ற பாடலின் வீடியோவைப் பகிர்ந்து, மலரும் நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் 24 வருங்களுக்கு முன்னர், 1995 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் ஹிட்டான திரைப்படம் ‘பாம்பே’. அந்தத் திரைப்படத்தில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக , ஷைலா பானு என்னும் கதாபாத்திரத்தில் மனிஷா கொய்ராலா நடித்திருந்தார். மதங்களை கடந்த மகத்தான காதலைப் பேசி மாபெரும் வெற்றியை பாம்பே திரைப்படம் பெற்றிருந்தது.
நடிகை மனிஷா கொய்ராலா இந்த திரைப்படம் மூலமாக தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அந்த திரைப்படத்தில் அமைந்த ‘கண்ணாளனே’ பாடல் காட்சியில் மனிஷாவின் நடிப்பு வெகுவாகப் பேசப்பட்டது. கே.எஸ்.சித்ரா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானால் அந்த பாடல் பாடப்பட்டிருந்தது.
தற்போது அந்த பாடலின் வீடியோவைத் தன் இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டு, “எல்லா காலத்திலும் என் மனம் கவர்ந்த நான் மிகவும் விரும்பும் பாடல்” என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் அவர் தனது பதிவில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், இயக்குநர் மணிரத்னம் ஆகியோரையும் குறிப்பிட்டிருந்தார். மேலும் நடிகர் அரவிந்த் சாமியை குறிப்பிட்டு, என் கதாநாயகனை நான் எப்படி மறக்க முடியும் என்றும் கேட்டுள்ளார்.
**
மேலும் படிக்க
**
**
[பாஜக அழைப்பு: அலைபாயும் ஜி.கே.வாசன்](https://minnambalam.com/k/2019/06/12/20)
**
**
[சட்டமன்றக் கூட்டம்: எடப்பாடியின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/06/12/25)
**
**
[டிஜிட்டல் திண்ணை: ஆலோசனைக் கூட்டம்! எடப்பாடி-பன்னீர் க்ளைமேக்ஸ் ஒப்பந்தம்!](https://minnambalam.com/k/2019/06/11/65)
**
**
[உள்ளாட்சித் தேர்தல் நடக்காது: அமமுக எச்சரிக்கை](https://minnambalam.com/k/2019/06/11/55)
**
**
[வாரிசுகள் தோல்வியடைந்த வரலாறு](https://minnambalam.com/k/2019/06/12/22)
**
�,”