iமக்காச்சோளம் பயிரிட்டால்தான் மானியம்!

public

நெல்லுக்குப் பதிலாக மக்காச்சோளம் பயிரிட்டால் மட்டுமே மானியம் தருவதாக நீர்வள, நிலவளத் திட்ட அதிகாரிகள் உலக வங்கியில் கணக்கு காட்டுவதற்காக விவசாயிகளைக் கட்டாயப்படுத்துகின்றனர்.

தமிழக நீர்வள, நிலவள திட்டத்தின் கீழ் பொதுப்பணி, வேளாண், மீன்வளம் உள்ளிட்ட எட்டு துறைகளை ஒருங்கிணைத்து இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், இரண்டாம் கட்டமாக ரூ.3 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 4,778 ஏரிகள், 477அணைகள் புனரமைப்புக்கு ரூபாய் 2,161 கோடி நிதியின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது.

ரூ.839 கோடி செலவில் ஏழு துறைகளுக்கான பணிகள் நடக்கின்றன. இதில் வேளாண் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் சொட்டு நீர் பாசனம், திருந்திய நெல் சாகுபடி, மாற்றுப் பயிர் சாகுபடி உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில், நெல் சாகுபடிக்கு மானியம் கொடுத்தாலும் உடனடியாகப் பலன் பார்க்க முடியாது.

“நெற்பயிருக்குத் தேவையான நீரில் பாதியளவு, அதாவது 650 மிமீ. பாசன நீர் போதுமானது” என்று கூறி நீர்வள, நிலவளத் திட்ட அதிகாரிகள் நெல்லுக்குப் பதிலாக மக்காச்சோளம் பயிரிடக் கட்டாயப்படுத்துகின்றனர். நெல் சாகுபடி செய்ய மானியம் கேட்டால் அதிகாரிகள் தருவதில்லை என்று கூறப்படுகிறது. மானியம் கிடைக்கிறது என்பதால் விவசாயிகளும் மக்காச்சோளம் பயிரிடகின்றனர். குறிப்பாக, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், தஞ்சை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டப் பகுதிகளில் நெல்லுக்குப் பதிலாக மக்காச்சோளம் பயிரிடுகின்றனர். இதனால், நெல் சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, மாநில அரசு நெல் சாகுபடிக்கு முக்கியத்துவம் அளிக்குமாறு வேளாண் துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. ஆனால், அதிகாரிகள் விவசாயிகளை நெல்லுக்குப் பதிலாக மக்காச்சோளத்தை பயிரிடக் கட்டாயப்படுத்துவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நீர்வள, நிலவள அதிகாரி ஒருவர் கூறுகையில், “நெல் பயிரிட்டால் விளைச்சல் எதிர்பார்த்த அளவு இருக்குமா என்ற சந்தேகம் உள்ளது. அதே நேரத்தில் மக்காச்சோளம் என்றால், குறைந்த நீரில் நல்ல விளைச்சலைப் பார்க்க முடியும். அதனால் தான் அதிகாரிகள் மக்காச்சோளம் பயிரிட அறிவுறுத்துகின்றனர். இந்த திட்டத்தின் கீழ் வேளாண் துறைக்கு மட்டும் ரூ.400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது” என்று தெரிவித்தார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *