iபெட்ரோல் – டீசல் வாகனங்களுக்குத் தடையா?

Published On:

| By Balaji

பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்களை முழுவதுமாக நிறுத்திவிட்டு எலெக்ட்ரிக் வாகனங்களை மட்டுமே இயக்கும் எண்ணம் இல்லை என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

இந்தியாவில் அதிகரித்து வரும் வாகனப் பயன்பாட்டால் சுற்றுச் சூழல் மாசுபாடு, போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. பெட்ரோல், டீசல் விலையேற்றமும் பெரிய பிரச்சினையாக உள்ளது. எனவே எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாட்டை நோக்கி இந்தியா பயணிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் வாகன எஞ்சின் விதிமுறைகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. 2020ஆம் ஆண்டுக்குள் இந்தியச் சாலைகளில் சுமார் 70 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்கள் இயங்கும்படியான திட்டம் ஒன்றையும் அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் கீழ் வாகனப் போக்குவரத்தில் 30 சதவிகித அளவை எலெக்ட்ரிக் மயமாக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள் முழுவதையும் எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்றும் திட்டம் இல்லை என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். டெல்லியில் ஜூலை 16ஆம் தேதி எண்ணெய் கிணறுகள் ஏலத்துக்கான ஒப்பந்த நிகழ்ச்சியின் முடிவில் தர்மேந்திர பிரதான் பேசுகையில், “குறிப்பிட்ட ஒரு நாளில் பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள் முழுவதுமாக நிறுத்தப்படும் என்று அரசு அறிவிப்பு ஏதேனும் வெளியானதா? இந்தியாவால் அதைச் செய்ய இயலாது. நமக்கு நிறைய ஆற்றல் வளங்கள் தேவை. நிலக்கரி, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்கள், ஹைட்ரோ கார்பன் ஆகிய அனைத்தும் தேவை. ஆனால் சுகாதாரமான ஆற்றலை நோக்கிய பயணத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். எனவேதான் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதற்காக பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனப் பயன்பாடு முழுவதும் நிறுத்தப்படாது” என்று தெரிவித்துள்ளார்.

**

மேலும் படிக்க

**

**[டிஜிட்டல் திண்ணை: சூர்யாவை தொலைபேசியில் மிரட்டிய அமைச்சர்!](https://minnambalam.com/k/2019/07/16/84)**

**[மணிரத்னம் – நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!](https://minnambalam.com/k/2019/07/17/20)**

**[தயாராகிறது பாகுபலி 3?](https://minnambalam.com/k/2019/07/16/26)**

**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**

**[ “மாற்று வேட்பாளரை மாற்றுங்கள்”- துரைமுருகனிடம் ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/07/16/53)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share