இந்தியாவில் 62 சதவிகிதம் அளவிலான பெண் பணியாளர்கள் தாங்கள் விரும்பிய வேலை கிடைக்காமல் வேறு ஏதேனும் பணியில் இயங்கிக்கொண்டிருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
*ஐசிஐசிஐ லம்போர்டு இன்ஷ்யூரன்ஸ்* நிறுவனம் சார்பாக இந்தியாவில் 22 முதல் 25 வயதுடைய பெண்களின் பணிச் சூழல் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பணிக்காக இடம்பெயரும் பெண்கள், பிரசவத்துக்குப் பின்னர் பணியில் தொடர்வது, அலுவலகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஆகியவை குறித்தும் இந்த ஆய்வு அலசியுள்ளது. பணியிடங்களில் ஆண்களின் ஆதிக்கம்தான் அதிகமாக இருப்பதாக இந்த ஆய்வில் பங்கேற்ற 53 சதவிகிதம் அளவிலான பெண்கள் கூறியுள்ளனர். இதில் 46 சதவிகிதத்தினர் 22 முதல் 33 வயது உடையவர்களாவர்.
மற்ற எந்தத் துறையைக் காட்டிலும் தொலைத்தொடர்பு, உற்பத்தி ஆகிய இரண்டு துறைகளில்தான் பாலினப் பாகுபாடு அதிகமாக இருப்பதாக இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 62 சதவிகிதம் அளவிலான பெண்கள் தங்களது அலுவலகங்களில் ஊதியப் பாகுபாடு இருப்பதாகவும் இந்த ஆய்வில் தெரிவித்துள்ளனர். பெரும்பாலான பெண்கள் தாங்கள் விரும்பிய பணி கிடைக்காமல் வேறு ஏதேனும் ஒரு பணியில் தொடருவதாகவும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. பணி உயர்வு, ஊதிய உயர்வு, பணி வழங்கல் போன்றவற்றில் பாலினப் பாகுபாடு இருப்பதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.�,