ஒருநாளாவது ‘கபாலி’ பற்றிய அப்டேட் வராமல் இருக்கிறதா என்று பார்த்தால், வாய்ப்பே இருக்காத மாதிரி தெரிகிறது. இந்தச் செய்தி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்குமா? அதிர்ச்சியைக் கொடுக்குமா? என்பதே குழப்பமாக இருக்கிறது. ‘கபாலி’ படத்தின் பாடல்கள் மாஸ் ஹிட் ஆகிவிட்டது. காட்டில் பரவிய நெருப்பாய் எங்கு பார்த்தாலும் கபாலி கபாலிதான். மொபைல் ஃபோன்களின் ரிங்க்டோன்கூட நெருப்புடா, கபாலிடாதான். அந்த அளவுக்கு வெற்றிபெற்றுள்ள கபாலியின் ஐந்து பாடல்களில் ஒரு பாடல்தான் டான்ஸ் மூவ்மெண்ட் கொண்ட பாடல். மற்ற பாடல்களில் ரஜினியின் மாண்டேஜ் காட்சிகள்தான் இடம்பெறுகின்றன என்பதை ‘கபாலி’ படத்தில் இரண்டு பாடல்களை எழுதியிருக்கும் கபிலன் கூறியிருக்கிறார். ஒரு பாட்டுக்கு நடனமாடும் ரஜினியின் டான்ஸை ரசிப்பதா? நான்கு பாடல்களில் ரஜினியின் ஸ்டைலான மான்டேஜ் காட்சிகளை ரசிப்பதா? என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.�,
Iநீ நடந்தால் நடையழகு… கபாலி!
Published On:
| By Balaji
இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel