iதொழில்நுட்பத்தால் வேலையை இழக்கவில்லை!

Published On:

| By Balaji

தொழில்நுட்பத்தால் வேலை இழப்பு ஏற்படுவதில்லை என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

ஜூலை 15ஆம் தேதியன்று கோவா தலைநகர் பனாஜியில் கோவா ஐடி தின நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சரான ரவிசங்கர் பிரசாத், கோவா முதல்வர் மனோகர் பாரிகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது ரவிசங்கர் பிரசாத் பேசுகையில், “வேலை இழப்பு என்ற பேச்சுகளை நான் ஏற்றுக்கொள்வதில்லை. ஏன்? ஒரு புதிய தொழில்நுட்பத்தால் ஒரு வேலைவாய்ப்பு இழப்பு ஏற்படுகிறது என்றால், அந்த இடத்தில் புதிதாக 20 வேலைவாய்ப்புகள் உருவாகும். இதை நான் எனது அனுபவத்தை வைத்துக் கூறுகிறேன்” என்று கூறினார்.

ஐடி துறையில் மட்டும் ஆறு லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகி வருவதாகக் கூறிய ரவிசங்கர் பிரசாத், அதற்கு நாஸ்காம் அறிக்கையைச் சான்றாகக் காட்டினார். புதிய டிஜிட்டல் சூழலால் நிறைய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். “ஒட்டுமொத்த உலகமே இந்தியாவை நம்பிக்கையுடன் உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது. இந்திய ஐடி நிறுவனங்களின் ஆற்றல் வளத்துக்கு இந்த இடத்தில் நான் மரியாதை தெரிவித்தாக வேண்டும்” என்று அவர் கூறினார்.

தகவல் தொழில்நுட்பப் புரட்சி குறித்து அவர் பேசுகையில், 2015ஆம் ஆண்டில் கிராமப்புறங்களில் பிபிஓக்களை கொண்டுவருவதற்கான திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்திய பிறகு, நாட்டின் 27 நகரங்களில் 91 பிபிஓக்கள் இயங்கி வருவதாகக் கூறினார். “கிராமப்புற பிபிஓக்களுக்குச் செல்லும்போதெல்லாம், அங்கு கிராமப்புற இளைஞர்கள் பணிபுரிவதை நான் காண்கிறேன்” என்று ரவிசங்கர் பிரசாத் கூறினார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment