கடந்த மூன்று ஆண்டுகளில் திண்டுக்கல் மாவட்டத்தில் 41,955 இலவச மடிக்கணினிகளை வழங்கியுள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்குக் கடந்த 8 ஆண்டுகளாகவே தமிழக அரசின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசின் இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் தலா ரூ.12,400 மதிப்பிலான 41,955 இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவற்றின் மொத்த மதிப்பு ரூ.56.29 கோடி எனவும் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதேபோல, இந்த ஆண்டில் பதினோராம் வகுப்பு மாணவர்கள் 11,795 பேருக்கும், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் 12,576 பேருக்கும் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, இந்தியாவிலேயே முதன்முறையாகப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் கல்லூரித் தலைவர்களுக்கும் இலவச மடிக்கணினிகள் தமிழகத்தில் வழங்கப்படவுள்ளன. இத்திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் உயர் நிலைப் பள்ளிகளின் 800 தலைமை ஆசிரியர்களும், நடுநிலைப் பள்ளிகளின் 841 தலைமை ஆசிரியர்களும் இலவச மடிக்கணினியைப் பெறுகின்றனர்.
இலவச மடிக்கணினித் திட்டம் குறித்து திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி நகரப் பஞ்சாயத்து மேல்நிலைப் பள்ளியின் மாணவி ராஜேஸ்வரி, *டைம்ஸ் ஆஃப் இந்தியா* ஊடகத்திடம் பேசுகையில், தனக்கு மடிக்கணினி கிடைக்கும் என்று கனவில் கூட எண்ணவில்லை எனவும், இந்த மடிக்கணினி வாயிலாக ஆங்கிலம் முதல் இயற்பியல் வரை பல்வேறு பாடங்களைக் கற்றுக்கொள்ள முடிவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த மடிக்கணினி தனக்கு வரப்பிரசாதம் எனவும், இதை வைத்து பல்வேறு விஷயங்களை மிக எளிதாகக் கற்றுக்கொள்ள முடிவதாகவும் சென்னமநாயக்கன்பட்டி அரசு கள்ளர் பள்ளியின் மாணவரான நாகேஷ்வரன் கூறியுள்ளார்.
**
மேலும் படிக்க
**
**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**
**[நிர்வாகிகள் விலகுவதை தடுக்க…சசிகலா போட்ட பட்ஜெட்!](https://minnambalam.com/k/2019/07/13/7)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**
**[ மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?](https://minnambalam.com/k/2019/07/12/24)**
**[டிஜிட்டல் திண்ணை: ஆட்சியைக் கவிழ்க்க ஸ்டாலின் மீண்டும் முயற்சி!](https://minnambalam.com/k/2019/07/12/87)**
�,”