Iதமிழக அரசை கலைக்க வேண்டும்!

public

பாஜகவின் பினாமியாக செயல்படும் தமிழக அரசைக் கலைக்க வேண்டும் எனத் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை மாதவரத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடத்தப்பட்டது. இதில், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கலந்துகொண்டு கரும்பு, ஆடை போன்றவற்றை பயனாளர்களுக்கு வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ தமிழகத்தில் கொலை, கொள்ளைப் போன்றவை அதிகரித்துள்ளன. தமிழகம் அமைதி பூங்காவாக இல்லை. வளர்ச்சி பாதையிலும் இல்லை. ஊழல் நிறைந்த ஆட்சிதான் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பாஜகவின் பினாமி ஆட்சி தான் தமிழகத்தில் உள்ளது. இந்த ஆட்சி விரைவில் கலைக்கப்பட வேண்டும் அல்லது அகற்றப்பட வேண்டும்” என்று தெரிவித்தார். தமிழக அரசியலில் விரைவில் மாற்றம் ஏற்படும் எனவும் அவர் கூறினார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *