பாகிஸ்தான் வான்வெளியில் இந்திய விமானங்கள் பறப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதால் அமெரிக்கா, ஐரோப்பா பயணங்களுக்கான விமானக் கட்டணங்கள் 20 சதவிகிதம் வரையில் குறைந்துள்ளன.
பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற பாலகோட் தாக்குதலைத் தொடர்ந்து இந்திய விமானங்களைத் தனது வான்வெளியில் அனுமதிக்கப் பாகிஸ்தான் தடை விதித்தது. இதனால் இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வழியாகச் செல்லாமல் மாற்றுப் பாதைகளில் பிற நாடுகளுக்குப் பறக்க வேண்டியதாக இருந்தது. இதனால் பயண நேரம் அதிகமானதோடு, செலவுகளும் அதிகரித்தன. இந்நிலையில் 140 நாட்கள் கழித்து ஜூலை 16ஆம் தேதி தடையை நீக்கியது பாகிஸ்தான். தடை விதிக்கப்பட்டிருந்த நான்கு மாதங்களில் மட்டும் அரசுக்குச் சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு ரூ.430 கோடி இழப்பு ஏற்பட்டது.
தற்போது தடை நீங்கியுள்ளதால் தற்காலிகமாக நிறுத்திவைத்திருந்த பயணங்களை விமான நிறுவனங்கள் மீண்டும் தொடங்கியுள்ளதோடு, விமானக் கட்டணங்களையும் குறைத்துள்ளன. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுக்கான பயணக் கட்டணங்கள் 15 முதல் 20 சதவிகிதம் வரையில் குறைந்துள்ளதாகவும், வளைகுடா நாடுகளுக்கான பயணக் கட்டணங்கள் 30 சதவிகிதம் குறைந்துள்ளதாகவும் பயண சேவை நிறுவனமான யாத்ராவின் தலைமைச் செயலாக்க அதிகாரி சரத் தால் *டைம்ஸ் ஆஃப் இந்தியா* ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். டெல்லியிலிருந்து அபுதாபி ரிட்டன் பயணத்துக்கான கட்டணம் ரூ.30,000லிருந்து ரூ.17,000 ஆகக் குறைந்துள்ளதாகவும், லண்டன் பயணத்துக்கான கட்டணம் ரூ.80,000லிருந்து ரூ.63,000 ஆகக் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
டெல்லி – அமிர்தசரஸ் – பிர்மிங்கம் இடையேயான ஏர் இந்தியா விமானச் சேவை ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் தொடங்கும் என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரான ஹர்தீப் சிங் புரி அறிவித்துள்ளார். டெல்லி – இஸ்தான்புல் இடையேயான இடைவிடாத விமானச் சேவையை இண்டிகோ நிறுவனம் ஜூலை 18ஆம் தேதி தொடங்கியுள்ளது. இதனால் இந்த வழித்தடத்தில் பயண நேரம் 10.5 மணி நேரங்களிலிருந்து 6.45 மணி நேரங்களாகக் குறையும். விமானக் கட்டணங்களும் குறைவதால் விமானப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
**
மேலும் படிக்க
**
**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**
**[அத்திவரதர்: வரிச்சியூர் செல்வத்துக்கு பாஸ் கொடுத்தது யார்?](https://minnambalam.com/k/2019/07/18/54)**
**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**
**[மணிரத்னம் – நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!](https://minnambalam.com/k/2019/07/17/20)**
**[டிஜிட்டல் திண்ணை: கிராம சபைகளைக் குறிவைக்கும் சூர்யா](https://minnambalam.com/k/2019/07/17/80)**
�,”