தங்க நகைகளை விற்பனை செய்ய ஹால்மார்க் முத்திரையைக் கட்டாயமாக்க அரசு திட்டமிட்டு வருவதாக மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நவம்பர் 15ஆம் தேதி டெல்லியில் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் அவர் பேசுகையில், “இந்திய தரநிலைகள் பணியகமானது 14 காரட், 18 காரட் மற்றும் 22 காரட் ஆகிய மூன்று தரங்களாகப் பிரித்து தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை வழங்கி வருகிறது. இதை விரைவில் கட்டாயமாக்கவுள்ளோம். உலகத் தரத்துக்கு இணையாக இருக்கும் விதமாகவும், 4ஆவது தொழில்துறை புரட்சியாகவும் இது மேற்கொள்ளப்படவுள்ளது” என்றார். ஆனால் இது எப்போது கட்டாயமாக்கப்படவுள்ளது என்ற விவரம் எதையும் அவர் குறிப்பிடவில்லை.
இந்தியாவில் தரநிலைகள் பணியகத்தால் அங்கீகரிக்கப்பட்ட 220 ஹால்மார்க் மையங்கள் உள்ளன. இவை பெரும்பாலும் தமிழ்நாட்டிலும், கேரளாவிலும்தான் உள்ளன. ஸ்மார்ட் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உற்பத்தியை ஊக்குவிப்பதே 4ஆவது தொழிற்புரட்சியாகும் என்றும் ராம் விலாஸ் பஸ்வான் தனது பேட்டியில் கூறியுள்ளார். செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய ஸ்மார்ட் தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பது தொடர்பாக நீண்ட விவாதம் தேவை என்று பொருளாதார விவகாரங்கள் துறை இணையமைச்சர் சி.ஆர்.சவுதரி வலியுறுத்தியுள்ளார்.�,