}வங்க தேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இன்று நடைபெற்ற மூன்றாம் நாள் ஆட்டத்தில் எளிதில் சுருட்டிவிடலாம் என்று நினைத்திருந்த இந்திய அணிக்கு சற்று ஏமாற்றத்தை தந்தது சாஹிப் அல் ஹசன் மற்றும் வங்க தேச அணியின் கேப்டன் ரஹீம் ஆகியோரது பேட்டிங்க்.
உணவு இடைவேளையின் போது 125 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் இழந்திருந்த அந்த அணியை இவர்கள் இருவரும் சரிவிலிருந்து மீட்டனர். சாஹிப் 82 ரன்கள் எடுத்திருந்த போது அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சபீர் ரஹ்மானும்16 ரன்களில் ஜடேஜா வீசிய பந்தில் ஆட்டமிழந்தார்.அதன் பின் ரஹிமுடன் ஜோடி சேர்ந்த மெஹதி ஹசன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்த ஜோடி ரன் எண்ணிகையை சீராக அதிகரித்து வருகின்றது.
மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் குவித்துள்ளது. ரஹிம் 81 ரன்களுடனும் மெஹதி ஹசன் 51 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இருப்பினும் இந்திய அணியைவிட வங்கதேச அணி 365 ரன்கள் பின் தங்கியுள்ளது. இன்னும் இரண்டு நாள் ஆட்டம் மீதமுள்ள நிலையில் இந்திய அணி போட்டியை டிராவாக்க விடாமல் வெல்வதற்கான முயற்சியிலேயே ஈடுபட்டு வருகிறது.�,