குறைந்த வருமானம் கொண்ட நாடுகளின் மத்தியில் உடல்நலத்துக்காக அதிகமாகச் செலவிடும் நாடுகளில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கிறது என தேசிய சுகாதாரக் கணக்குகள் தெரிவித்துள்ளது.
இது குறித்து தேசிய சுகாதாரக் கணக்குகள் (National Health Accounts) வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில், 2015-16ஆம் ஆண்டில் இந்தியாவின் பொது சுகாதாரச் செலவினம் ரூ.1,40,054 கோடியாக இருந்துள்ளது. முக்கியமாக உத்தரப் பிரதேசம், பிகார், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுகாதாரச் செலவினத்திற்காக மத்திய அரசு 1.1-1.3 சதவிகிதம் அளிக்கிறது. இதற்கு எதிர்மாறாக சுகாதாரச் செலவுகள் அதிகரித்துள்ளது. 2015-16ஆம் ஆண்டில் மகாராஷ்டிரா அரசு மொத்த உள்மாநில உற்பத்தியில் 0.7 சதவிகிதம் மட்டுமே சுகாதாரத் துறைக்கு ஒதுக்கியது. ஆனால், 57,000 கோடி ரூபாய் தேவையாக இருந்தது. இதனால், மக்கள் தங்கள் சொந்தச் செலவில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருந்தது. இதனால், அவர்களுக்குச் சுமை அதிகரித்தது.
மற்ற பகுதிகளைக் காட்டிலும் கேரளாவில் உள்ள மக்கள் நலமுடன் இருக்கின்றனர். அங்கு, மொத்த உள் மாநில உற்பத்தியில் 1 சதவிகிதம் மட்டுமே சுகாதாரத்துக்கு ஒதுக்கப்படுகிறது. 2015-16ஆம் ஆண்டில் மொத்த உள் மாநில உற்பத்தியில் 1.7 சதவிகிதம் மட்டுமே சுகாதாரத்துக்காக ஒதுக்கியுள்ளது ஜம்மு-காஷ்மீர் அரசு. பிரதமர் நரேந்திர மோடியின் மாநிலமான குஜராத்தின் மொத்த உள்மாநில உற்பத்தியில் 0.8 சதவிகிதம் மட்டுமே சுகாதாரத்துக்கு ஒதுக்கப்படுகிறது. இது தேசிய அளவு ஒதுக்கப்படும் அளவை விட குறைவானது.
சமீபத்தில் நாடாளுமன்றத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் அனுபிரியா படேல் இந்த புள்ளிவிவரங்களைச் சமர்பித்தார். மொத்த செலவில் 67.8 சதவிகிதம் சுகாதாரத்துக்காகத் தங்கள் சொந்தப் பணத்தில் செலவிடுகின்றனர். 2025ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுகாதாரத்துக்கு 2.5 சதவிகிதம் நிதி ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து முன்னாள் சுகாதாரச் செயலாளர் சுஜாதா ராவ் கூறுகையில், “சுகாதார உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கு அதிக முதலீடு தேவை என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால், பொருளாதாரத்தைப் பார்த்தால், நம்மிடம் இருப்பது கொஞ்சம், ஆனால் இருக்கும் பொறுப்புகள் அதிகம்” என தெரிவித்துள்ளார்.
2005-06ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுகாதாரத்துக்கான நிதி 0.96 சதவிகிதமாக இருந்தது. இது 2015-16ஆம் ஆண்டில் 1.18 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. தற்போது, சுகாதாரத்திற்காக மொத்தமாக 30 சதவிகிதத்தை ஒதுக்குகிறது மத்திய அரசு.
இதன்மூலம், உடல்நலத்துக்காக மக்கள் தங்கள் சொந்தக் காசை அதிகளவில் செலவிடுவது தெரிய வருகிறது.�,