iசிதம்பரம்: சிபிஐ மறுத்தும் சிபிஐ காவல்!

Published On:

| By Balaji

திகாருக்குள் தன் கால்கள் பட்டுவிடக் கூடாது என்ற சிதம்பரத்தின் திட்டத்தை அவரது தரப்பு மூத்த வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் வாதாடி நிறைவேற்றியிருக்கிறார்கள். அதே நேரம் இப்படி ஒரு வினோதமான வழக்கை உச்ச நீதிமன்றத்தில் பார்த்ததில்லை என்று வழக்கறிஞர்கள் வட்டாரத்தில் வியப்பு தெரிவிக்கிறார்கள்.

தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட ஜாமீனில் வெளிவரமுடியாத வாரண்டை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் விசாரணை மீண்டும் இன்று (செப்டம்பர் 3) பானுமதி, போபன்னா அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், “வரும் 5ஆம் தேதி வரை சிதம்பரத்தின் சிபிஐ காவலை நீட்டிக்கலாம்” என்று கருத்து தெரிவித்தார். ஆனால் சிபிஐ தரப்போ, “சிதம்பரத்தை மேற்கொண்டு சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க தேவை இனி ஏதுமில்லை. எனவே, அவரை சட்டப்படி உடனடியாக நீதிமன்றக் காவலில் திகார் சிறைக்கு அனுப்புங்கள்” என்று வாதிட்டது.

ஆனால், சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர்களோ இன்றும் திகாருக்கு அனுப்ப வேண்டாம், அடுத்து இவ்வழக்கு வரும்வரை சிபிஐ காவலிலேயே இருந்துகொள்கிறோம் என்று வாதிட்டனர். அப்போது உச்ச நீதிமன்றம், “அப்படியென்றால் செப்டம்பர் 5 வரை ஜாமீன் கோரி கீழ் நீதிமன்றத்தில் நீங்கள் வற்புறுத்தக் கூடாது” என்று கேட்க, அவர்களும் சம்மதித்தனர்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதிகள், காவலுக்கு அனுப்ப வேண்டாம் என்ற சிபிஐ தரப்பின் கோரிக்கையை நிராகரித்து, வரும் 5ஆம் தேதி வரை சிதம்பரத்தை சிபிஐ காவலில் வைக்க உத்தரவிட்டனர்.

சிபிஐ காவலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மனுதாரரே சிபிஐ காவலை நீட்டிக்கக் கோருவதும், ஆனால் சிதம்பரத்தை விசாரிக்க விரும்பவில்லை என்று சிபிஐ தெரிவிப்பது வினோதம்தான்.

இதற்கிடையில், சிதம்பரத்தை மீண்டும் ரோஸ் அவென்யூ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியது சிபிஐ. வழக்கினை விசாரித்த நீதிபதி அஜய் குமார் குஹார், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை படித்துப் பார்த்த பிறகு, சிதம்பரத்தின் சிபிஐ காவலை வரும் 5ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். வழக்கினையும் அன்றைய தினத்துக்கே ஒத்திவைத்தார்.

**

மேலும் படிக்க

**

**[டிஜிட்டல் திண்ணை: திமுக புள்ளிகளுக்கு பாஜக வலை!](https://minnambalam.com/k/2019/09/03/25)**

**[தம்பியை திமுகவில் சேர்த்துவிட்ட அதிமுக எம்.எல்.ஏ!](https://minnambalam.com/k/2019/09/03/46)**

**[அதிகாரம் – அறநெறி: சமகாலத்தின் இரு சாட்சிகள்!](https://minnambalam.com/k/2019/09/03/21)**

**[பிக் பாஸ் 3: கவின் காலி செய்த பிக் பாஸ் ஸ்கிரிப்ட்!](https://minnambalam.com/k/2019/09/03/40)**

**[ரஜினிக்கு அதிகரிக்கும் அழுத்தம்!](https://minnambalam.com/k/2019/09/02/28)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel