அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள 100 படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றுவருகிறது.
தமிழ்த் திரையுலகில் தொடர்ந்து த்ரில்லர் பாணி படங்கள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில் அதர்வா க்ரைம் த்ரில்லர் பாணியில் நடித்துள்ள 100 திரைப்படம் ரிலீஸுக்குத் தயாராகிவருகிறது. ஹன்சிகா கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தில் அதர்வா காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார்.
பள்ளி மாணவிகள் கடத்தப்பட்டு கொலைசெய்யப்படும் வழக்கு, திரைக்கதையின் மையமாக இருக்கும் என்பதை தற்போது வெளியாகியுள்ள டீசர் மூலம் அறியமுடிகிறது.
சாம் ஆண்டன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். யோகி பாபு, ராதாரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யூடியூப் சேனல் மூலம் பிரபலமான விஜய்குமார், ஹரிஜா ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைக்கும் இதற்கு கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார், ரூபன் படத்தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார்.
100 திரைப்படத்தின் படப்பிடிப்பைக் கடந்த ஆண்டு ஜூலை மாதமே படக்குழு நிறைவுசெய்தது. அந்த ஆண்டு இறுதியில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது படம் வரும் மே 3ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
[100 டீசர்](https://www.youtube.com/watch?time_continue=89&v=Yyrp7PFhm3w)�,