Iகிச்சன் கீர்த்தனா: மீன் கறி

Published On:

| By Balaji

கொரோனா வைரஸ், இந்தியாவில் அதிகம்பேரை பாதித்துள்ளதோ… இல்லையோ, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கோழி இறைச்சியை அதிகமாக பாதித்துள்ளது. சிக்கனைக் கண்டால் நடுங்குகிறவர்கள், இந்த மீன் கறியைச் சமைத்து உண்ணலாம். மன அழுத்தத்தைக் குறைக்கும் மீன் உணவுகள் அனைவருக்கும் ஏற்றது. ஆரோக்கியத்துக்கும் அஸ்திவாரமிடுவது.

**என்ன தேவை?**

மீன் – கால் கிலோ

வெந்தயம் – கால் டீஸ்பூன்

பச்சை மிளகாய் – 2 (நறுக்கவும்)

சின்ன வெங்காயம் (நறுக்கியது) – அரை கப்

தக்காளி – ஒன்று

இஞ்சி – சிறு துண்டு (தோல் சீவவும்)

பூண்டு – 3 பல்

குடம்புளி – 2 பெரிய துண்டு

கறிவேப்பிலை – சிறிதளவு

வெந்தயத்தூள் – கால் டீஸ்பூன்

மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்

மல்லித்தூள் (தனியாத்தூள்) – ஒரு டீஸ்பூன்

மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்

தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

**எப்படிச் செய்வது?**

மீனை சுத்தம் செய்துகொள்ளவும். குடம் புளியை கால் கப் தண்ணீரில் ஊறவைக்கவும்.சிறிதளவு தண்ணீரில் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி வெந்தயம் தாளித்து, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும். மிளகாய்த்தூள் கலவையைச் சேர்த்து அடுப்பை சிறுதீயில் வைத்து வதக்கவும். எண்ணெய் பிரிந்து வரும்போது ஊறவைத்த குடம்புளியை ஊறவைத்த தண்ணீருடன் சேர்க்கவும். பின்னர் ஒன்றரை கப் முதல் 2 கப் வரை தண்ணீர்விட்டு, கறிவேப்பிலை சேர்க்கவும்.

குழம்பு நன்கு கொதித்ததும் மீன், வெந்தயத்தூள், கறிவேப்பிலை சேர்க்கவும். பின்னர் வாணலியை மூடி சிறுதீயில் வைக்கவும். மீன் வெந்து எண்ணெய் பிரிந்த பின்னர் குழம்பை இறக்கவும்.

[நேற்றைய ஸ்பெஷல்: சாப்பிட்டவுடன் டீ, காபி, குளிர்பானங்கள் அருந்தலாமா?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/public/2020/03/15/2/kitchen-keerthana-sunday-samayal-tips)�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share