Iகிச்சன் கீர்த்தனா: இஞ்சி டீ

Published On:

| By Balaji

கொரோனாவைக் கட்டுப்படுத்தும் மருந்துகளுக்காக இன்னும் போராடிக்கொண்டிருக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். ஆனால், ஆரோக்கியமான உணவு முறையே நம்மிடம் எந்த நோயையும் அண்டவிடாமல் பார்த்துக்கொள்ளும் என்கின்றனர் மருத்துவர்கள்.

மேலும், “நோய்க்கிருமிகள் பரவுவதற்குப் புறச்சூழல்கள் மட்டுமே காரணமாய் இருப்பதில்லை. உடலில் நோய்த்தொற்றுக்கான வாய்ப்புகள் இருப்பதும், எதிர்ப்பு சக்தி இல்லாமல் இருப்பதுவுமே நோய்கள் பரவுவதற்குக் காரணம். எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை எடுத்துக்கொள்வதன்மூலம் வைரஸ், பாக்டீரியா போன்ற நோய்த்தொற்றுகளை வெகுவாகத் தவிர்க்க முடியும்” என்கிறார்கள். இப்படிப்பட்ட நேரத்தில் வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய, நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும் பானங்களின் முக்கிய இடம் பிடிக்கிறது இஞ்சி டீ.

மூன்று டம்ளர் தண்ணீரில் ஒரு விரலளவு இஞ்சியைச் சேர்த்துக் கொதிக்கவைத்து, அது சுண்டி வரும்போது, அதில் கொஞ்சம் தேன் கலந்து சூடாகக் குடிக்கலாம். கொதிக்கும்போது கொஞ்சம் புதினா சேர்த்துக்கொண்டால் இன்னும் நல்ல மணமாக இருக்கும். வாரம் இரண்டு முறை மாலை வேளைகளில் இதைப் பருகலாம்.

மூச்சுத் திணறல், வைரல் தொற்று, காய்ச்சல் எல்லாவற்றுக்கும் இஞ்சி டீ ஏற்றது. எதிர்ப்பு சக்தியையும் ஜீரண சக்தியையும் அதிகரிக்கும் ஆற்றல் வாய்ந்தது. செரிமானக் கோளாறுகளைச் சரிசெய்து, கழிவுகளை மலம் வழியே வெளியேற்றிவிடும். வாந்தி, காய்ச்சல், சளி, தலைவலி, மூக்கடைப்பு போன்ற உடல்நலக் கோளாறுகளுக்குச் சிறந்த நிவாரணி இஞ்சி டீ.

[நேற்றைய ஸ்பெஷல்: கொரோனா தற்காப்பு](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2020/03/29/3)�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share