Iகாஸ் சிலிண்டர் விலை உயர்வு!

public

மானிய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 7 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 31ஆம் தேதி, மத்திய எண்ணெய் துறை அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் மக்களவையில் பேசுகையில், “அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் அனைத்து மானியங்களையும் அகற்றும் விதமாக, சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை ஒவ்வொரு மாதமும் 4 ரூபாய் அதிகரிக்க அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் எண்ணெய் நிறுவனங்களை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது” என்று தெரிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன.

இதன்படி, செப்டம்பர் 1ஆம் தேதி மானிய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 7 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 2.31 ரூபாய் மட்டுமே அதிகரிக்கப்பட்டது. அதை ஈடுகட்டும் விதமாக தற்போது 7 ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தகவலின்படி, டெல்லியில் 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை முன்பு 479.77 ரூபாயாக இருந்தது. தற்போது இதன் விலை 487.18 ரூபாயாக அதிகரித்துள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *