ஜூன் 23ஆம் தேதியன்று சென்னை அடையாரில் உள்ள ஜானகி எம்ஜிஆர் கல்லூரியில் நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி மீண்டும் போட்டியிடுகிறது. இவர்களை எதிர்த்து பாக்கியராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணி போட்டியிடுகிறது. தேர்தல் பிரச்சாரப் பணிகளில் இரு அணிகளும் தீவிரமாக இறங்கியுள்ளன. இந்நிலையில், நடிகர் சங்கத் தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்கும்படி நடிகர் விஷால் இன்று சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதனை நேரில் சந்தித்து மனு கொடுத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், “ஜூன் 23ஆம் தேதியன்று நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் போலீஸ் பாதுகாப்புடன் நடைபெறவேண்டும் என்பதற்காக காவல் ஆணையர் விஸ்வநாதனை சந்தித்து மனு கொடுத்திருக்கிறோம். அவரும் நிச்சயமாக பாதுகாப்பளிப்பதாக உறுதியாக சொல்லியிருக்கிறார். எந்தப் பிரச்சினையுமில்லாமல் தேர்தல் அமைதியாக நடைபெறும் என்று நாங்களும் உத்தரவாதம் அளித்துள்ளோம். ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையில் நிச்சயமாக தேர்தல் நடைபெறும்.
தேர்தல் நடைபெறவுள்ள இடத்தில் ஏற்கெனவே பல கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. எம்ஜிஆரே மூன்று பொதுக்குழு கூட்டங்களை நடத்தியுள்ளார். அண்மையிலும் பல கூட்டங்கள் நடந்துள்ளன. அப்பகுதியில் 4,000 மாணவர்கள் தினமும் வந்துபோகின்றனர். அந்த இடத்தில் சுமார் 500 வாகனங்களை நிறுத்தக்கூடிய அளவுக்கு மூன்று ஏக்கர் நிலம் உள்ளது. அந்த இடத்தில் நெரிசலோ, போக்குவரத்து சிக்கலோ ஏற்பட வாய்ப்பில்லை” என்று தெரிவித்தார்.
**
மேலும் படிக்க
**
**[முதல்வரை வரவேற்காத பன்னீர்செல்வம் மகன்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/06/15/43)**
**[குடிநீருக்கான பணம் குப்பைத்தொட்டிக்குப் போனது: துரைமுருகன்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/06/14/17)**
**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/06/13/22)**
**[டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கலைப்பு- ஸ்டாலினை குறிவைக்கும் வருமான வரித்துறை!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/06/14/65)**
**[தினகரன் தளபதிக்கு எடப்பாடி தூது: ஜெயக்குமார் எதிர்ப்பு!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/06/14/51)**
�,”