�நடிகர் கிருஷ்ணா நடிப்பில் உருவாகியுள்ள களரி திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டு தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுவருகிறது.
கிரண்சந்த் இயக்கத்தில் கிருஷ்ணா, வித்யா பிரதீப் இணைந்து நடித்துள்ள படம் களரி. கேரளாவில் வாத்திருத்தி எனும் தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதியில் நடக்கும் படமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. நட்சத்திரா மூவி மேஜிக் நிறுவனம் இதைத் தயாரித்துள்ளது. கிருஷ்ணாவின் தங்கையாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார்.
செக்கச் சிவந்த வானம், வடசென்னை போன்ற படங்களில் கதாபாத்திரங்களின் பெயர்கள் போஸ்டர்களாக வெளியிடப்படுவது போலவே இந்தப் படத்துக்கும் சில போஸ்டர்கள் முன்னதாக வெளியிடப்பட்டன. அதன்படி சித்திக்காக ஜெயப்பிரகாஷ், பீட்டராக சென்ட்ராயன், மாரியாக எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்தப் படம் ஆகஸ்ட் 24ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. காதலைப் பகிரும் நாயகன் மற்றும் நாயகி, பாசத்தைப் பொழியும் அண்ணன் மற்றும் தங்கையிடையேயான காட்சிகள், மிரட்டப்படும் நாயகனின் தங்கை குறித்த சில காட்சிகள் எனப் பயணிக்கிறது இந்த [ட்ரெய்லர்.](https://youtu.be/TfSCIFmiYJM)�,