iகச்சா எண்ணெய்: இந்தியாவை நம்பும் ஈரான்!

public

இந்தியாவுக்குக் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் மூன்றாவது பெரிய நாடாக ஈரான் உருவாகியுள்ளது.

ஈரானிலிருந்து இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்யின் அளவு நாள் ஒன்றுக்கு 6,40,000 பேரல்களாக அதிகரித்துள்ளது. 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்குப் பிறகு இப்போதுதான் மீண்டும் அதிகளவில் ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. ஒட்டுமொத்தமாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நாள் ஒன்றுக்கு 45.1 லட்சம் டன் பேரல்களை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2.5 விழுக்காடு அதிகமாகும். ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளில் சீனாவுக்கு அடுத்து இந்தியா இரண்டாவது பெரிய நாடாக விளங்குகிறது.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பொறுப்பேற்ற பின்னர் ஈரானுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்ததால், அந்நாட்டின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி சரிவைக் கண்டது. இந்நிலையில் தற்போது ஈரானிடமிருந்து தனது இறக்குமதியை இந்தியா அதிகரித்துள்ளது. தற்போது இந்தியாவுக்குக் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஈராக் மற்றும் சவுதி அரேபிய நாடுகளை அடுத்து மூன்றாவது இடத்தை ஈரான் பிடித்துள்ளது. நான்காவது இடத்தில் வெனிசுலாவும், ஐந்தாவது இடத்தில் அமெரிக்காவும் உள்ளன. உலக எண்ணெய் வளம் மிக்க நாடுகளில் ஈரான் முக்கிய நாடாக விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *