iஎய்ம்ஸ்: மதுரையில் மத்தியக் குழு ஆய்வு!

Published On:

| By Balaji

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் மத்திய நிதிக் குழுவினரும், ஜப்பான் குழுவினரும் ஆய்வு செய்து வருகின்றனர்.

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பிரதமர் மோடி கடந்த ஆண்டு அடிக்கல் நாட்டிய நிலையில் மருத்துவமனை கட்டுவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. முன்னதாக மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழக அரசு நிலத்தை ஒப்படைக்கவில்லை என்ற தகவல் ஆர்டிஐ மூலம் வெளிச்சத்துக்கு வந்தது.

இதற்கு விளக்கமளித்த தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ”தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தை ஆய்வு செய்ய டெல்லி மற்றும் ஜப்பானிலிருந்து 8 பேர் கொண்ட நிபுணர் குழுவினர் தமிழகம் வரவுள்ளனர். வரும் 10ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை ஆய்வு நடைபெறவுள்ளது. அதன் பிறகு நிலம் ஒப்படைக்கப்படும்” என்று கூறியிருந்தார்.

அதன்படி தமிழகம் வந்துள்ள மத்திய நிதிக்குழுவைச் சேர்ந்த சஞ்சய்ராய் தலைமையிலான குழுவினர் மற்றும் ஜப்பான் நிபுணர் குழுவினர் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தில் இன்று (ஜூன் 10) ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

இந்த ஆய்வைத் தொடர்ந்து தமிழக அரசு மத்திய அரசிடம் நிலத்தை ஒப்படைக்கும் என்று கூறப்படுகிறது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share