உத்தரபிரதேச மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி 325 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. ஆனாலும் இதுவரை யார் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார் என்று தெரியவில்லை. உத்தர பிரதேச முதல்வராக மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், உமாபாரதி ஆகியோரில் ஒருவர் பதவியேற்கலாம் என கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. உத்தரபிரதேசத்தில் தேர்தலுக்கு முன், பாஜ முதல்வர் வேட்பாளரை அறிவிக்கவில்லை. பிரதமர் மோடியை முன்னிறுத்தியே தேர்தலை பாஜ சந்தித்தது. தற்போது எதிர்பாராத அளவுக்கு அமோக வெற்றி கிடைத்துள்ளதால், மூத்த தலைவர் ஒருவரை முதல்வராக்க பாஜ மேலிடம் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. கோரக்பூர் மக்களவைத் தொகுதியில் இருந்து 5 முறை வெற்றி பெற்ற யோகி ஆதித்யாநாத், முதல்வராக வரக் கூடும் என்று கட்சியின் மாநில நிர்வாகிகளிடம் பேச்சு அடிபடுகிறது. காரணம், கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் யோகி ஆதித்யாநாத்தை முதல்வர் வேட்பாளர் போல் முன்னிலைப்படுத்தி வந்தார். எனினும், முதல்வர் வேட்பாளராக ராஜ்நாத்சிங் அறிவிக்கப்படுவார் என ஓராண்டுக்கு முன்பே பேசப்பட்டு வந்தது. மற்றொரு மத்திய அமைச்சர் உமாபாரதியின் பெயரும் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் இதை உமாபாரதியும் மறுத்தார். மேனகா காந்தியின் மகனும், எம்பியுமான வருண்காந்தியை முதல்வராக்க பாஜகவில் ஒருதரப்பினர் குரல் எழுப்பினர். . ஏற்கனவே 2002ம் ஆண்டில் ராஜ்நாத்சிங் இங்கு முதல்வராக இருந்தார் என்பதால், அவரோ, உமாபாரதியோ முதல்வராக தேர்வு செய்யப்படலாம் என பேசப்படுகிறது. எப்படியோ அனுபவமும், வலியையும் மிகுந்த கட்சியின் மூத்த தலைவர் ஒருவரையே உத்தர பிரதேச முதல்வராக அமர்த்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது பாஜக.�,
Iஉத்தர பிரதேச முதல்வர் யார்?
+1
+1
+1
+1
+1
+1
+1