Iஉச்சம் தொட்ட ஜிஎஸ்டி வசூல்!

Published On:

| By Balaji

7

அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டியில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலாகியுள்ளது.

அக்டோபர் மாத சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ஒரு லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. பண்டிகைக் கால தேவைகள் மற்றும் இணக்கமான சூழல் ஆகியவற்றால்தான் வரி வசூல் உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அக்டோபர் மாதத்தில் ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.1,00,710 கோடியாக உள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டியாக ரூ.16,464 கோடியும், மாநில ஜிஎஸ்டியாக ரூ.22,826 கோடியும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியாக ரூ.53,419 கோடியும் வசூலிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி செஸ் வரியாக ரூ.8,000 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு தற்போதுதான் மீண்டும் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஜிஎஸ்டியில் வசூலிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் ரூ.1,03,459 கோடி வசூலிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் தனது ட்விட்டர் பதிவில், “ஜிஎஸ்டி வசூல் ஒரு லட்சம் கோடி ரூபாயைத் தாண்டிருப்பது இந்தியாவில் பொருளாதாரம் சிறப்பான நிலையில் உள்ளது என்பதைத்தான் காட்டுகிறது” என்று கூறியுள்ளார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share