Iஇன்ஸ்டகிராம்: ஸ்பெஷல் வசதி!

Published On:

| By Balaji

வாடிக்கையாளர்களின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது இன்ஸ்டகிராம் நிறுவனம்.

முன்னணி சமூக வலைதளமான இன்ஸ்டகிராமைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. தங்களது ஃபேவரைட் புகைப்படங்களைப் பதிவிட சுமூகமான தளமாக இது இருப்பதே இந்த வரவேற்பிற்கான காரணமாகக் கூறப்படுகிறது. வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதிகளைத் தொடர்ந்து அறிமுகப்படுத்திவரும் இன்ஸ்டகிராம், தற்போது வாடிக்கையாளர்களின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.

அதன்படி ‘யுவர் ஆக்டிவிட்டி’ எனும் வசதி நிறுவப்பட்டுள்ளது. அளவுக்கு மீறினால் எதுவுமே ஆபத்துதான் எனும் விஷயத்தை சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் பலர் அறிவதில்லை. நேரம் காலம் தெரியாமல் மணிக்கணக்கில் செல்போன்களிலேயோ, கம்யூட்டர்களிலேயோ தங்களின் நேரத்தைச் செலவிட்டு வருகின்றனர். இதனால் அவர்களின் உடல்நிலையும் பாதிப்படைகிறது. இதைக் கருத்தில் கொண்டு உருவாகியுள்ள இந்த வசதியால் இனி இன்ஸ்டகிராமை எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறோம் எனத் தெரிந்துகொள்ளலாம். மேலும், எவ்வளவு நேரம் மட்டும் இன்ஸ்டகிராம் நோட்டிஃபிகேஷனை ஆக்டிவாக வைத்திருக்க விரும்புகிறோம் எனவும் தேர்வுசெய்துகொள்ளலாம்.

இதனால் இன்ஸ்டகிராமில் தாம் செலவிடும் நேரம் வரம்புக்குள் இருக்கிறதா எனப் பயனர்கள் எளிதில் தெரிந்துகொள்ளமுடியும். கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்ட இந்த வசதி தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. ஃபேஸ்புக்கிலும் இதேபோன்ற வசதி வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share