இந்தியப் பொருட்களுக்கான இறக்குமதி வரிச் சலுகைகளை அமெரிக்கா ரத்து செய்துள்ளது.
50 இந்தியப் பொருட்களுக்கான வரியற்ற இறக்குமதி சலுகைகளை அமெரிக்க அரசு ரத்து செய்துள்ளது. இந்தப் பட்டியலில் பெரும்பாலும் கைத்தறி மற்றும் வேளாண் பொருட்களே உள்ளன. அமெரிக்க அரசின் மத்திய பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இதுவரையில் வரி விலக்குடன் இறக்குமதி செய்யப்பட்ட 90 பொருட்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இப்பொருட்களுக்கான இறக்குமதி வரிச் சலுகைகளை நீக்கும்படி அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதன்படி நவம்பர் 1ஆம் தேதி முதல் இப்பொருட்களை வரி விலக்குடன் அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்யமுடியாது.
சலுகை ரத்து செய்யப்பட்ட பொருட்களின் பட்டியலைப் பார்க்கையில், பொருளை விநியோகிக்கும் நாட்டை அடிப்படையாகக் கொள்ளாமல், பொருட்களின் அடிப்படையிலேயே இச்சலுகைகள் நீக்கப்பட்டுள்ளன என்பது விளங்குகிறது. எனினும், இச்சலுகைகளால் அதிகம் பயனடைந்துவந்த இந்தியாவுக்கு பேரிழப்பாக அமைந்துவிட்டது. 90 பொருட்கள் அடங்கிய இப்பட்டியலில் 50 பொருட்கள் இந்தியாவைச் சேர்ந்தவையாக உள்ளன. இதனால் சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அதிகம் பாதிப்படையும். முக்கியமாகக் கைத்தறி மற்றும் வேளாண் துறையில் தாக்கம் ஏற்படும்.�,