iஆதித்யா வர்மா: துருவ் வெளியிட்ட வீடியோ!

public

விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ஆதித்யா வர்மா. தற்போது இதன் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் துருவ் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை பகிர்ந்துள்ளார்.

தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்காக உருவாகிவரும் ஆதித்யா வர்மா படத்தில் துருவ்க்கு ஜோடியாக பனித்தா சந்து நடிக்கிறார். இவருக்கும் இது முதல் படமாகும். பிரியா ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பாலா இயக்கத்தில் உருவான வர்மா படம் கைவிடப்பட்டு இப்படம் உருவாகியுள்ள நிலையில், இது தனக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை தனது இன்ஸ்டகிராம் பதிவில் தெரியப்படுத்தியுள்ளார்.

“ஆதித்யா வர்மா அழகான விஷயமாக உள்ளது. இது போல் என் வாழ்வில் எப்போதும் நிகழ்ந்ததில்லை. அவன்தான் எனக்கு வாழ்க்கைப் பற்றிய அர்த்தத்தை, காரணத்தை, என்னைப் பற்றிய தெளிவை, மிக முக்கியமாக எப்படி விட்டுக்கொடுக்காமல் போராடவேண்டும் என்பதையும் கற்றுத் தந்தான். இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள அனைவரையும் எனது அன்பை செலுத்துகிறேன்.குறிப்பாக வீடியோவில் கடைசியாக இடம்பெற்றவருக்கு; அவர் இல்லாமல் இது நடந்திருக்காது” என்று பதிவிட்டுள்ளார்.

படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோவில் படக்குழுவைச் சேர்ந்த அனைவரும் உள்ளனர். இறுதியாக விக்ரம் காட்சி தருகிறார்.

கிரிசயா இயக்கத்தில் ஈ4 எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்ய விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். விரைவில் இதன் வெளியீடு குறித்த அறிவிப்புகள் வரவுள்ளன.

**

மேலும் படிக்க

**

**[டிஜிட்டல் திண்ணை: சூர்யாவை தொலைபேசியில் மிரட்டிய அமைச்சர்!](https://minnambalam.com/k/2019/07/16/84)**

**[மணிரத்னம் – நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!](https://minnambalam.com/k/2019/07/17/20)**

**[தயாராகிறது பாகுபலி 3?](https://minnambalam.com/k/2019/07/16/26)**

**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**

**[ “மாற்று வேட்பாளரை மாற்றுங்கள்”- துரைமுருகனிடம் ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/07/16/53)**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0