ஜி.வி. பிரகாஷ் என்றாலே அனைவருக்கும் நினைவில் இருந்தது அவரின் பாடல்கள். ஆனால் அந்த காலங்கள் மாறி “டேசி ஹீரோ” என புரூஸ்லி திரைப்பட டிரைலரில் பெயர்பெறும் அளவிற்கு அவரின் பல படங்கள் வந்த வண்ணம் இருந்தன. முதல் படம் டார்லிங், காமெடி கிளாமர் கலந்த திரில் திரைப்படமாக வெளிவந்து வெற்றிபெற்றது. அதன் பின் வந்த திரைப்படங்களில் அதனை தொடர நினைத்து செய்த முயற்சிகள் சொல்லவே தேவையில்லை.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அவரின் புரூஸ்லி திரைப்படம் வெளியாகும் என தகவல் வந்தது , ஆனால் சில காரணங்களால் அதன் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது. ஏற்கனவே அடங்காதே, 4G என படபிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் அடுத்த படம் ஒன்றின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது. **ஐங்கரன்** என பெயரிடப்பட்டுள்ள அந்த திரைப்படத்தின் 2 விதமான பர்ஸ்ட் லுக்குகள் வெளிவந்துள்ளன.
அதில் ஜி.வி.பிரகாஷ் வேலையில்லா பட்டதாரி படத்தில் வரும் தனுஷ் போல் கண்ணாடி, தாடி, என புதிய தோற்றத்தில் உள்ளார். கையில் இன்ஜினியரிங் கல்லூரியில் லேப்க்கு பயன்படும் டிராப்ட் ஒன்றினை வைத்துள்ளார். அது டிராப்ட் தானா என்பதில் சிறு சந்தேகம் உள்ளது.
மற்றொரு பர்ஸ்ட் லுக்கில் கேள்விக்குறி ஒன்று அருகில் உள்ளது போல் சில வார்த்தைகள் அதில் சேர்க்கப்பட்டுள்ளன. Idea, plan, Execution, Process, Draft என கல்லூரிக் காலத்தினை நினைவுக்கு கொண்டுவந்தாலும், உண்மையான கதை பற்றி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்தப் படம் ஒரு புதிய முயற்சியாக இருக்கும் என அவரின் ரசிகர்காளால் எதிர்பார்க்கப்படுகிறது இதன் படபிடிப்பு விரைவில் நடைபெறும் என தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த திரைப்படத்தினை ஈட்டி திரைப்படத்தின் இயக்குனர் ரவியரசு இயக்குகிறார்.�,