iஅன்பே… நீ என்ன அதிமுகவா: அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

லவ்வர்ஸ் டே மூடுல இருந்து இன்னும் நம்ம ஆளுங்க வெளிய வரல போல. கூட்டணி களேபரத்தையும் லவ் மூடுலயே கமெண்ட் அடிக்கிறாங்க. இன்னும் எலெக்‌ஷன் தேதி வந்து கூட்டணி முடிவாகி பிரச்சாரம் பண்ணி தேர்தல் நடந்து முடியுற வரைக்கும் இவங்க அலப்பறை தாங்க முடியாது. கண்டண்ட்க்கு குறை இல்லாம ஓடிரும். வழக்கமா கட்சிக்கு நாலு பேரு மட்டும் தான் நமக்கு மீம்ஸ்க்கு டெம்ப்ளேட்டா மாட்டுதாங்க. பிரச்சாரம் தொடங்கிட்டா நமக்கு தினம் ஒரு ஹீரோ கிடைப்பாரு. அவரை வச்சு செய்யலாம்.

‘உங்களில் யார் அடுத்த ஹீரோ? – சிறந்த மீம்ஸ் மூஞ்சிக்கான தேடல்’ன்னு ஒரு போட்டியே நடத்தலாம் போல. ஒவ்வொரு ஊருலயும் ஒவ்வொரு கட்சியிலயும் அடுத்த ஹீரோவை நம்ம ஆளுங்களையே செலக்ட் பண்ணச் சொல்லி ஸ்டேட்டஸ் போடலாம். செல்லூர் பாய், மைக் டைசன் அப்படின்னு நிறைய பேருக்கு ஓய்வு கொடுத்துட்டு புதுசா ஆளுங்களை இறக்கலாம். நீங்க அப்டேட்டை பாருங்க. நான் யாராவது ஸ்பான்ஸர் கிடைக்குறாங்களான்னு பார்த்துட்டு வாரேன்.

**@Kozhiyaar**

இன்றைய தேதியில் ‘எதிர்பார்த்த அளவு மோசம் இல்லை’ என்பதும் பாராட்டில் தான் சேரும்!!

**@mohanramko**

நாட்டில் ராணுவ வீரர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது; மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் தான் நாட்டை பாதுகாக்க முடியும் – தமிழிசை

எல்லாம் தெரிஞ்சி தான் பேசறாங்களா…?

**@manipmp**

வெளுத்ததெல்லாம் பால் அல்ல, பால் பவுடர்கள்

**@mohanramko**

லவ் பண்ணி கல்யாணம் பண்ற வரைக்கும் ஸ்டேட்டஸ்ல காதல் பாடல்களாக வச்சிட்டு, கல்யாணம் ஆன ரெண்டாவது நாளே சோக பாடல் வைப்பதை பார்த்தா…..

ரொம்ப கொடுமையா இருக்கு

**@Kozhiyaar**

ஏதாவது செய்வார் என்று எதிர்ப்பார்த்து காத்திருக்கையில் எதுவுமே செய்யாமல் இருப்பது Surpriseல் சேராதா!?

**@drkvm**

ஆதார் கார்டை , பான் கார்டு , வங்கி கணக்கோடு இணைத்தது ” சாதனை “…

# வோட்டர் ஐடியோடு இணைக்காதது..” வேதனை “

**@shivaas_twitz**

அன்பே… நீ என்ன அதிமுகவா?

முத்தம் எனும் இடைத்தேர்தல் கூட, கல்யாணம் எனும் பொதுத்தேர்தலுக்கு பிறகு தான் என்கிறாய்..!

**@mohanramko**

“தமன்னாவுடன் நடிப்பது சவாலாக இருந்தது” உதயநிதி பேட்டி.

நடிப்பதே சவாலா இருக்குன்னு சொல்றாரோ!

**@Akku_Twitz**

தமிழக மக்களின் குரல் டெல்லியில் ஒலிக்க வேண்டுமென பிரதமர் விரும்புகிறார் – மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்

டெல்லிக்கே போய் போராட்டம் நடத்திய விவசாயிகள நேரில் கூட வந்து பாக்கலயே?

**@Annaiinpillai**

ஹோட்டலில் மெனுகார்டுகளில் உள்ள உணவின் விலைகளை பார்த்தாலே நல்ல பசியும் பாதியாக அடங்கி விடுகிறது !

**@Annaiinpillai**

மனிதனுக்கு ஆசையை காட்டி மோசம் செய்வேன் !

“ஜங்க்புட்”

**@mohanramko**

தமிழக மக்களின் குரல் டெல்லியில் ஒலிக்க வேண்டுமென பிரதமர் விரும்புகிறார் – மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்

ஒரு ஸ்பீக்கர் வச்சா சரியாகிட போகுது…

**@Kozhiyaar**

மேலே ஏற ஏற, நமக்கு கொம்பு முளைக்க ஆரம்பிக்கும்!!

அதை நாமே உணர்ந்து நறுக்கி கொள்வது நலம்!!

மற்றவர் நறுக்கி விட்டால் வலியும் வேதனையும் கடுமையானதாக இருக்கும்!!

**@ajmalnks**

“மத்தியில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், தமிழகம் கோரும் நிதி ஒதுக்கப்படுவதில்லை!”- முதல்வர் பழனிசாமி

போச்சு அமிதாப் மாமாவுக்கு கோபம் வந்துடுச்சு…

**@Annaiinpillai**

‘என் பிரச்சனை உனக்கு வந்தால் தெரியும்’ என்று சொல்வது

‘மறைமுகமான சாபத்தின் பொருளாகும்!

**@RahimGazzali**

நாம் க்ரீம் பிஸ்கட் சாப்பிடும்போதுதான் நம்மில் தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தை விழித்துக்கொள்கிறது.

**@ரைட்டர் பேயோன்**

எழுபதுகளிலேயே செந்தூரப் பூவையும் ஜில்லென்ற காற்றையும் ட்ராக்கிங் தொழில்நுட்பமாகப் பயன்படுத்தியவன் தமிழன்.

-லாக் ஆஃப்�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share