சென்னை அடையாறில் சுதா என்பவரின் வீட்டின் பின்புறம் ஒரு தெரு நாய் 11 குட்டிகள் ஈன்று, அருகே யாரும் வந்தால் கடிக்க வந்துள்ளது. அந்த வீட்டில் சுதா மற்றும் அவருடைய வயதான அம்மா என இருவர் மட்டும் வசித்து வரும் நிலையில் அவர்களுக்கு, அந்த நாய் தொல்லையாகவும், பயமாகவும், பரிதாபமாகவும் இருந்துள்ளது.
மேலும் அவர்களுக்கு குட்டிகளை தூக்கி வெளியில் ரோட்டில் போட மனம் வராததால். கார்ப்பரேஷன், புளூ க்ராஸ் , GCC என எல்லா இடங்களிலும் அவர்கள் அணுகி பாலூட்டும் நாயையும் கண் திறக்காத குட்டிகளையும் பத்திரமாக எடுத்து சென்று காப்பகத்தில் வைக்க கோரியுள்ளார்கள்.
கார்ப்பரேஷன் ஊழியர்கள் நாய் பிடிக்க தகுந்த உபகரணங்கள் இல்லாது வந்து, நாய் கடிக்க வந்ததால் திரும்பி சென்று விட்டார்கள். ஒரு சில நாட்களாகியும் ஒரு இடத்திலும் தீர்வு கிட்டாத நிலையில், நவம்பர் 23, 2020 அன்று பிரதமர் அலுவலக வலைதளத்தில் புகார் பதிந்துள்ளனர். அன்றைய தினமே சில மணி நேரத்தில் பிரதமர் அலுவலகத்தில் இருந்து புகார் பெறப்பட்டது . தீர்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது என தகவல் வந்துள்ளது.
எந்த துறை, அலுவலகம், முகவரி அதிகாரி பெயர் , தொலைபேசி எண், இ மெயில் விவரங்கள் என எல்லாம் பகிரப்பட்டுள்ளது. அடுத்த தினம் புகார் அங்கிருந்து வேறு அதிகாரிக்கு அனுப்பப்பட்ட விவரங்கள் தெரியப்படுத்தப்பட்டது.
பின் வேறு அலுவலகத்தில் இருந்து ஒரு போன். அதன் பின் கார்ப்பரேஷன் வேனில் 5 பேர் வந்து நாயை பிடித்து, 11 குட்டிகளையும் அட்டை பெட்டியில் வைத்து நாயையும் குட்டிகளையும் பத்திரமாக ப்ளூ க்ராஸில் சேர்த்துள்ளார்கள்.
இந்தியாவின் தென் மூலையில் உள்ள அடையாறில் உள்ள இரு முதியோரின் கோரிக்கையும், மனிதாபிமானமற்ற முறையில் தெருவில் ஒரு பாலூட்டும் நாயும், கண் திறக்காத 11 குட்டிகளும் எறியப்படக்கூடாது, தாயும் கண் திறக்காத குட்டிகளும் பிரிக்கப்படக்கூடாது என்பதிலும் கூட பிரதமர் அலுவலகம் அக்கறையுடன் விரைந்து செயல்படுவது, பிரதமர் அலுவலக செயல்பாட்டின் ஒரு சிறு உதாரணமாகும்.
நன்றி : adyartimes�,