இங்கிலாந்தில் எந்த ஹோட்டலில் சாப்பிட்டாலும் 50 சதவிகிதத் தள்ளுபடி என இங்கிலாந்து அரசு அதிரடி சலுகையை அறிவித்துள்ளது.
இங்கிலாந்தில் ஆகஸ்ட் மாதம் முழுவதும் திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரை உணவகங்களில் உணவருந்தும் அனைவரின் 50 சதவிகிதக் கட்டணத்தை அரசே ஏற்க இருப்பதாகத் அறிவித்துள்ளது. ஜனவரி 12 ஆம் தேதி வரை இது அமலில் இருக்கும்.
உணவகங்கள், மதுபான விடுதிகள் உள்ளிட்டவையில் பணியாற்றும் 18 லட்சம் பேரின் வேலையை உறுதி செய்யும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த தள்ளுபடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும், விருந்தோம்பல் மற்றும் தங்குமிடங்களுக்கான மதிப்பு கூட்டு வரிகளை 20 சதவிகிதத்தில் இருந்து மிகக் குறைவாக 5 சதவிகிதமாகத் திருத்தியுள்ளது. இதனால் உணவகங்கள், மதுபான விடுதிகள், கபே உள்ளிட்டவை சரிவில் இருந்து மீள வாய்ப்பு உள்ளது என்றும் அரசு தெரிவித்துள்ளது.
**ராஜ்**�,