நான் பாட்டுக்கு டிக் டொக்ல வீடியோ பாத்துக்குட்டு இருந்தேன். டீக்கடைல வேலை பாக்குற தம்பி வந்து, ‘அண்ணே தேசிய பத்திரிகை தின வாழ்த்துகள்ணே’ அப்டின்னான். சரிடா தம்பி ஃப்ரீயா விடுன்னு சொன்னா, ‘அண்ணே எல்லா தொழிலுக்கும் ஒரு நியாயம் சொல்லுவியே. உன் தொழிலுக்கு ஒரு நியாயம் சொல்லுண்ணே’ அப்டின்னான். அது அப்டி இல்லைடா தம்பி. ஊருக்கே நியாயம் கிடைக்குறதுல வர்ற திருப்தி மட்டும் தான் ஒரு பத்திரிகையாளனுக்கு இருக்க சொத்து. மத்தபடி எல்லா பத்திரிகையாளனும், இங்க சம்பாதிச்ச பணத்தை இங்கயே தான் போட்டுட்டு போவாங்க. ஒன்ஸ் பத்திரிகைல இருந்துட்டா, கடைசி வரைக்கும் அவன் பத்திரிகையாளன் தான். மீடியா நடத்தி சம்பாதிச்சவங்க யாரையும் நீ பாக்க முடியாது. சாதிச்சவங்க பல பேர் இங்க இருந்து தான் போயிருக்காங்க. அதனால, அண்ணனை நாளைக்கு ரோல்ஸ் ராயல்ஸ் கார்ல பாக்கலாம்னு எல்லாம் கனவு காணாம போய் அந்த டீ போட்டு கொண்டா. அடுத்த நியூஸுக்கு போகணும்னு கிளம்பி வந்துட்டேன். இந்த அப்டேட்டை படிங்க. நியூஸ் போட்டுட்டு வந்துடுறேன்.
**mohanram.ko**
பொங்கலுக்கு தலா ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும்” – அமைச்சர் விஜயபாஸ்கர்.
அப்ப உள்ளாட்சி தேர்தல் கன்பார்ம்..
**ரமேஷ்.ஏ**
இப்பெல்லாம் எந்த பொண்ண பார்த்தாலும் சைட் அடிக்க தோணமாட்டிங்குதே…,
மூளையிலிருந்து போற ரசனை நரம்புல ஏதாவது கோளாறா இருக்குமோ???
**Sindhan**
ஏர்டெல் இழப்பு ரூ.23,044.9 கோடி
வோடபோன் இழப்பு ரூ.50,921.9 கோடி
ஜியோ எதிர்பார்க்கப்படும் இழப்பு ரூ.15,000 கோடி
பி.எஸ்.என்.எல் எதிர்பார்க்கப்படும் இழப்பு ரூ. 14,000 கோடி (4 ஜி லைசன்ஸ் தரப்படவில்லை)
இந்த செய்திகள் உணர்த்தும் பொருள் என்ன?
**mathimaran**
பாத்திமா தற்கொலை; ஜாதி, மத காழ்ப்புணர்ச்சி காரணமல்ல என்றால், ஐ.ஐ.டி. உட்பட்ட உயர் கல்வி நிறுவனங்களில் தற்கொலை செய்து கொண்டவர்களில் எத்தனைப் பேர் பார்ப்பன மாணவர்?
**தோழர் SK**
நான் படிக்கும் போது IIT சீனியர் பல பேர் இந்த ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கரோட ஆர்ட் ஆஃப் லிவிங்ல சேர சொல்லி ஆள் பிடிப்பானுங்க. பிகிர் எல்லாம் வரும்னு நம்பி போனா; வெங்காயம், பூண்டு , நான் வெஜ் கூடாது, முட்டை கோழியோட பீரியட்னு என்ன என்னமொ சொன்னாணுங்க. பிகராவது மயிராவது ஓடி வந்துட்டேன்
**SKP KARUNA**
கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்வது பற்றி : தமிழகத்தில் ஒரு கோடி வீடு, நிறுவனங்கள் இருக்கும்! அதில் 1% தினமும் பராமரிக்க வேண்டியிருந்தாலும் ஒரு லட்சம் தொட்டிகள்! அதாவது மனிதனுக்கு மாற்று எனில் ஒரு லட்சம் இயந்திரங்கள் தேவை! அப்போ நாடு முழுவதும்? R & D & உற்பத்திக்கு பெரிய வாய்ப்பு!
**Pachai Perumal**
உள்ளாட்சி தேர்தலில் தொகுதி பங்கீடு பற்றி பேச எல்.கே.சுதீஷ் தலைமையில் குழு அமைத்தது தேமுதிக 5 பேர் கொண்ட குழுவில் இளங்கோவன், மோகன்ராஜ், பார்த்தசாரதி, ஏ,எஸ்.அக்பர் ஆகியோரும் உள்ளனர்.
மொத்த கட்சி உறுப்பினர்களையும் குழுவில் சேர்ந்தாச்சா?
**ஜோக்கர்…**
இறைவா இந்த “காதலிடமிருந்து” என்னை காப்பாற்று,
“காமத்தை” நான் பார்த்துக்கொள்கிறேன்..!!!
**ரஹீம் கஸ்ஸாலி**
ஒரு பையன் டீக்கடைல ஒரு வடையை வாங்கி பேப்பரில் வைத்து அமுக்கு அமுக்குன்னு அமுக்குனான். கேட்டால் வடைல இருக்கற எண்ணையை பிழியறானாம். அவன் அமுக்குன அமுக்குல வடையோட வடிவமே மாறி போண்டாவா மாறிடுச்சு. இன்னும் கொஞ்சம் அமுக்கியிருந்தா பேப்பர்ல இருந்த எழுத்துல்லாம் அந்த வடைல ஒட்டிருக்கும்.
**Niranjan kumar**
தமிழகம் முழுவதும் பேனர் கலாச்சாரத்திற்கு தடை கோரி டிராபிக் ராமசாமி தொடரப்பட்ட வழக்கு: தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
அரசியல் கட்சிகள் மட்டுமல்ல அரசும் பேனர் வைக்க தடை வேண்டும் என கோரிக்கை வைக்கப் பட்டிருந்தது. கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்
**Wolfrik**
செங்கல்பட்டு தனியார் கல்லூரியில் ஒரு மாணவி கல்லூரியிலே தற்கொலை செய்திருகின்றாள்
அங்கு பிராமண ஆசிரியர் இல்லாததாலும் செத்தது இந்து மாணவி இல்லை என்பதாலும் விஷயம் வெளிவராது
கேரள பெண்ணுக்கு வரும் அனுதாபம் தமிழ் மாணவிக்கு வராது, காரணம் இங்கு பார்ப்பன ஆசிரியர்கள் இல்லையாம்
-லாக் ஆஃப்.�,”