qதொலைதூர மருத்துவ சேவை வழங்கும் திருநங்கை!

Published On:

| By Balaji

கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில் இந்தியாவில் முதன்முறையாக ஜோயா கான் என்ற திருநங்கை பொது சேவை மையம் மூலம் தொலைதூர மருத்துவ சேவை வழங்கி வருவதற்கு மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

ஜோயா கானின் படங்களை ட்விட்டரில் பதிவேற்றி உள்ள ரவிசங்கர் பிரசாத், “குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் ஜோயா கான் என்ற திருநங்கை பொது சேவை மையம் மூலம் தொலைதூர மருத்துவ சேவையைத் தொடங்கியுள்ளார். இந்தியாவில் முதன்முறையாக திருநங்கை ஒருவர் இத்தகைய சேவையில் ஈடுபட்டுள்ளார். திருநங்கையர் சமூகத்துக்கு டிஜிட்டல் கல்வியறிவை வழங்கவும் சிறப்பான வாய்ப்புகளை அளிக்கவும், இத்தகைய சேவையில் இறங்கியுள்ளதைப் பாராட்டுகிறேன்.

Zoya Khan is India’s first transgender operator of Common Service Centre from Vadodara district of Gujarat. She has started CSC work with Tele medicine consultation. Her vision is to support transgender community in making them digitally literate & give them better opportunities. pic.twitter.com/L0P9fnF2JT

— Ravi Shankar Prasad (@rsprasad) July 4, 2020

கொரோனாவால், வர்த்தக நடவடிக்கைகள் மந்தமடைந்துள்ளன; வேலைவாய்ப்பு பிரச்சினைகள் எழுந்துள்ளன. இந்த நிலையில் ஜோயா கான், தொழில்முனைவோருக்கு உந்துதலை அளிக்கும் வழிகாட்டியாக உருவெடுத்து உள்ளார்” என்று பாராட்டியுள்ளார்.

ஜோயா கான் நடத்தும் பொது சேவை மையத்தில், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக தொலைதூரத்தில் உள்ள மருத்துவர்களிடம் மருத்துவ ஆலோசனைகள் பெறலாம் என்பது சிறப்பு. இவரது சேவையைப் பாராட்டி பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

**-ராஜ்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share