வீட்டுக்கடன், வாகன கடன், தனிநபர் கடன் உள்ளிட்ட அனைத்து வகை வங்கிக் கடன்களும் அக்டோபர் 1 முதல் வெளிப்புற விகிதங்களுடன் இணைக்கப்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது. ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதம் 3 அல்லது 6 மாத கால அரசு பத்திரத்தின் பலன் மற்றும் மத்திய அரசு வெளியிடும் ஏதேனும் ஒரு சந்தை வட்டி விகிதத்துடன் இணைக்கப்பட்டுக் கணக்கிடப்பட வேண்டும் என்றும் அறிவித்தது.
மேலும் ரெப்போ விகிதத்தையும் 5.4 சதவிகிதமாக ரிசர்வ் வங்கி குறைத்து அறிவித்தது. இதன்படி மாற்றியமைக்கப்படும் வட்டி விகிதத்துக்கு ஏற்ப மாதாந்திர தவணையும் மாறும். ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல்படி பொதுத் துறை மற்றும் தனியார் வங்கிகள் ரெப்போ விகிதம் உள்ளிட்ட அனைத்து வகையான வெளிப்புற வட்டி விகிதங்களுடன் இணைத்து அறிவித்து வருகின்றன.
புதிய விதிகளின்படி வீட்டுக்கடன் வட்டி விகிதத்தை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 8.2 சதவிகிதமாகவும், பேங்க் ஆஃப் பரோடா 8.35 – 9.35 சதவிகிதமாகவும், பேங்க் ஆஃப் இந்தியா 8.55 – 8.60 சதவிகிதமாகவும் திருத்தியமைத்துள்ளன.
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா கடன் மதிப்பைப் பொறுத்து 8.3 சதவிகிதம் வட்டி விகிதம் நிர்ணயிப்பதாகத் தெரிவித்துள்ளது. தனியார் வங்கிகளான ஐசிஐசிஐ, ஆக்சீஸ் போன்றவை 9 சதவிகிதம் வரை வட்டி மதிப்பு நிர்ணயம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளன.�,